காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.
திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர்.
அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு அப்பவே விவாகரத்து பெற்றுவிட்டு சென்றனர்.
விவகாரத்து பின்னரும் பரிமாறப்பட்ட உணவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள் .கடைசி வரை அவர்களுக்குள் என்ன சண்டை என்றே தெரியவில்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்கள்
இதையும் படியுங்கள்
- உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
- ஒரு வருடம் எல்.எல்.எம் பாடநெறியை ஒழிக்கும் விதிகள் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது: இந்திய பார் கவுன்சில்
- ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- கூட்டுறவுச் சங்க ஆவணங்களை உறுப்பினர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்க முடியுமா? பதிவாளர் பார்க்கக்கூடிய பதிவுகளை மறுக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மொத்தமாகத் தாக்கல் என்ற புகார்: ஆராய்ந்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தீர்ப்பாயம் புறக்கணிக்கலாமா? மின்சாரத் தீர்ப்பாய மறுஆய்வு உத்தரவை ரத்து செய்து ₹3.5 லட்சம் செலவுத் தொகை விதிப்பு
← முந்தைய செய்தி: கும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
அடுத்த செய்தி →: 15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி

