விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை “பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர்.
இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன.
அனுப்பப்பட்ட 45 எலிகள், 15 பல்லிகள் உள்ளிட்ட பிராணிகளில் எத்தனை உயிரோடு இருக்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்
- நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
- கூகுல் புதிய சேவை: வயர்லெஸ் இணையம் அறிமுகமாகிறது
- சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.
- மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…
- நீல திமிங்கலம் தமிழ்நாடு கடற்கரையில் கரை ஒதுங்கியது
- இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) சென்னை வட்டம் இரண்டாகப் பிரிந்து விரிவாக்கம் நிறைவேற்றப்பட்டது
- மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
← முந்தைய செய்தி: பாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்
அடுத்த செய்தி →: ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என தண்டிக்க முடியாது. உச்சநீதி மன்றம்.
