காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை : காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரை சோதனை செய்தபோது, இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம் வெளிநாட்டு கரன்சி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, யுஏஇ எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணம் மாற்றம் செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்வதாகவும் தெரிந்தது. மேலும் காரில், அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலாஜி என்பவர் உள்பட 3 பேர் இருந்தனர். Kanchipuram flying squad இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரித்தார். பின்னர், அந்த கரன்சிகளை பறிமுதல் செய்து…

Read More காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை : காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு திருநங்கை விண்ணப்பித்து இருக்கிறார். இதன் மூலம் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாரதி கண்ணம்மா அரசியல் கட்சிகளின், மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார். அனேகமாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் இந்தியாவின் முதல் திருநங்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன என்று கேட்டோம் அவரிடம். “பல பெரிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்று எம்.பி.யாவேன் என்பதெல்லாம் இப்போது உடனே இயலாத காரியம் என்பதை நான் அறிவேன். எனினும் இதர பாலினத்தவர்களில் ஒருவர் போட்டியிடுவது என்பது தேர்தல் அரசியலில் நாங்களும் பங்கேற்கிறோம் என்பதை அறிவிக்கவும் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலும்கூட நாங்கள் இன்னும் வலுவாக எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலுமே களம் இறங்கி இருக்கிறேன்…

Read More மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை

ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்

World Health Day celebrated தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம். அந்த வகையில் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் அமைப்பான உலக சுகதார அமைப்பின் சார்பில் இன்று “உலக சுகாதார தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.  ஒருங்கிணைப்பு பணி: இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஜெனிவா அமைப்பு: இந்நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. நோய்களை விரட்டுங்கள்; இதன் முக்கிய வேலையானது “தொற்றுநோய்கள்” போன்ற நோய், நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில்…

Read More ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்

அருஞ்சுனை காத்த அய்யனார் – கழுகாசலமூர்த்தி கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர், குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலப்புதுக்குடி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் இரவு…

Read More அருஞ்சுனை காத்த அய்யனார் – கழுகாசலமூர்த்தி கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறை

9 month old booked for attempted murder in Pakistan   மின்சாரம் வேண்டி நடந்த போராட்டத்தில் பெற்றோருடன் வந்திருந்த 9 மாத குழந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் பாகிஸ்தான் போலீசார். இந்த விநோதமான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது யாசீன் தங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப் படாததைக் கண்டித்து தனது குடும்பத்தினர் உட்பட் 25 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதில் காயமடைந்த காவலர்கள் தங்களைத் தாக்கியதாக போராட்டம் நடத்திய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், போராட்டம் நடத்திய யாசீனின் ஒன்பது மாத பேரன் தன்னைத் தாக்கியதாக,…

Read More பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறை

நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் தோல்வியுற செய்வதே என் லட்சியம் – : ஆம் அத்மி தலைவர் கெஜ்ரிவால்

Aam Aadmi Party chief Arvind Kejriwal on Wednesday expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in the general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக நேற்று 3-வது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா…

Read More நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் தோல்வியுற செய்வதே என் லட்சியம் – : ஆம் அத்மி தலைவர் கெஜ்ரிவால்

பறக்கும் படையினர் முதல்வர் ஜெயலலிதா பயணித்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர்

Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday. பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வரின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய, பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள பல ஏக்கர் மைதானத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்தார். பின்பு விழா மேடைக்கு காரில் சென்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், முதல்வர் வந்த ஹெலிகாப்டரை அதிரடியாக…

Read More பறக்கும் படையினர் முதல்வர் ஜெயலலிதா பயணித்த ஹெலிகாப்டரை அதிரடியாக சோதனையிட்டனர்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!

Supreme Court dismissed hanging of 3 Rajiv killers today பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது! முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்வதாக, இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு முருகன் உள்ளிட்ட அந்த மூன்று பேரின் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைசாலையில் இருக்கும் நளினி மற்றும் நால்வரோடு சேர்த்து 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து…

Read More பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!

மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்

Rajnath Singh said that he will continue as president of BJP even after the success in the upcoming Lok Sabha election லக்னோ :- லக்னோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லையென்றால் தலைமை பதவியில் நீடிப்பீர்களா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ராஜ்நாத் சிங், “தங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தான் அந்த கட்சியின் தேசிய தலைவராகவே பணியாற்றுவேன்“ என தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற மக்களவை தேர்தலில் 272 க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமராக ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் டிக்கட் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தமது கட்சியின் எல்லா முடிவுகளும் கட்சியினுடைய…

Read More மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்

MS Dhoni offers to give up CSK captaincy: Reports ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக டோணி முடிவு செய்து ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது வீரர்கள், அணி நிர்வாகிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த கமிட்டியின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் வாக்குமூலம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ்…

Read More சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்