கணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

தேவதானப்பட்டி: கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன் முகமது யாசிக்கையே ஏற்பாடு செய்தார். டம்டம் பாறை அருகே சாலையோரத்தில் முகமது யாசிக் மற்றும் பிர்தோஷ் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பிறகு மலைப்பகுதியில் இருந்து தள்ளிவிட்டுச் சென்றனர். இவர்கள் கொலை செய்துவிட்டு மங்களூரில் பதுங்கியிருப்பது போலீஸ்க்கு தெரியவந்தது. இதையடுத்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் மங்களூர்சென்றனர். அங்கு பதுங்கியிருந்த பிர்தோஷ் மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமதுயாசிக் ஆகியோரை 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பாலக்காபாடி காஞ்சிபட்டா ஜேஎம் ரோடு பகுதியை சேர்ந்த முகமது சமீர்(32) என்பதை கர்நாடக போலீஸ் உறுதி செய்தனர்.

தேவதானப்பட்டி: அக்டோபர் 09, 2018 கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன்…

Read More

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த…

Read More

தாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்

சென்னை: புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று போலீசார் விசாரித்தனர் . ஏரியில் குழந்தை சடலம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்கு விரைந்த போலீஸ் குழந்தையின் சடலத்தை மீட்டனர். இப்போது போலீசாரின் சந்தேகம் குழந்தையின் தாய் உமா மீது விழுந்தது. விசாரணையில் குழந்தையை கொன்றது நான் தான் என உமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டது .அதனால்தான் குழந்தையை கொன்றேன் என்று கூறினார்.

சென்னை: அக்டோபர் 08, 2018 புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி…

Read More

யாருக்கும் புரியாத வகையில் கிறுக்கிய டாக்டர்களுக்கு ரூ.5000 அபராதம்

லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில், மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . ‘அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால், கையெழுத்து சரியாக இல்லை ‘ என, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்த விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால் வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .டாக்டர்கள் மூவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

லக்னோ :அக்டோபர் 05, 2018 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் . அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை …

Read More

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை

சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார் .

சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…

Read More

விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது

சென்னை அக்டோபர் 04, 2018 : 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில் ஈடுபடுத்தி பணம் சம்பாரித்து வந்துள்ளார் . போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ரவியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டு அவரது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள் . இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களை மீட்டு ரவியையும் கைது செய்தனர். 8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பது பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.

சென்னை: அக்டோபர் 04, 2018 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில்…

Read More

தஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்

தஞ்சாவூர்:செப்டம்பர் 29, 2018  சேகர் (வயது 55). என்பவர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதலில் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டிய பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் .அவரது உறவினர்கள் சேகரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அழைத்து செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அப்போது அந்த மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை ரூ.5 லட்சத்தை கட்டும்படி கூறியுள்ளது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்தை கட்டிவிட்டு மீதி தொகையை சில தினங்களில் கட்டி விடுகிறோம் என்று எழுதி கொடுத்து விட்டு சேகரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சேகர் இறந்து 3 நாட்கள் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார் . இதனால் சேகரின் மகன் சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேகரின் குடும்பத்தினர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இன்று மதியம் சேகர் உடலை பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதில் அவர் எப்போது இறந்தார்? என்பது உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.தஞ்சாவூரில் மருத்துவமனை நிர்வாகம் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்து விட்டதாக எழுந்த புகாரால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:செப்டம்பர் 29, 2018 சேகர் (வயது 55). என்பவர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதலில் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டிய பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித…

Read More

செய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்

செய்யாறு: செப்டம்பர் 25, 2018 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் . உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்திற்கு சான்று வழங்கிய பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பார் அசோசியேஷன் அளித்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

செய்யாறு: செப்டம்பர் 25, 2018 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் .…

Read More

கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்

புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார் நான் உங்களை விரைவில் பணக்காரராக மாற்றுகிறேன். இதனை பெரிதும் நம்பிய கிருஷ்ணவேணி கணவருக்கு தெரியாமல் அவ்வப்போது சாமியாருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சிறப்பு பூஜைகளையும், சிறப்பு யாகங்களையும் செய்துள்ளார். இதை அறிந்த அசோக்ராஜீ கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு யாகம், சிறப்பு பூஜைகள் செய்தாலும் பணக்காரராக முடியவில்லையே வறுமை வாட்டுகிறது என சாமியாரிடம் அசோக்ராஜீ கூறி கதறி உள்ளார். இறுதியாக நரபலி கொடுத்தால் செல்வந்தராகிவிடலாம் என சாமியார், அசோக்ராஜூக்கு விபரீத ஆசையை துண்டியுள்ளார் . இதற்காக மனைவியை நரபலி கொடுக்க துணிந்த அசோக்ராஜூ மனைவி கிருஷ்ணவேணியை காளிக்கோயிலுக்கு சாமியாருடன் அனுப்பி வைத்தார். சாமியார், கிருஷ்ணவேணியிடம் உனது கணவருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நீ சிறப்பு பூஜையை செய்தால்தான் அவர் உன்னையே சுற்றி வருவார் என்று கூறி அழைத்து சென்றுள்ளார் . ஏற்கனவே காளிக்கோயிலில் சாமியார் கோவிந்தராஜுக்கு உதவியாக பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர் மற்றொரு நபர் என 3 பேர் அங்கு இருந்துள்ளனர். கிருஷ்ணவேணியை கையில் எலுமிச்சை பழத்தை வைத்தபடி கண்ணை மூடி தியானத்தில் இருக்குமாறு கூறியுள்ளனர். நரபலிக்கு முன்பு கிருஷ்ணவேணியின் கை, கால்களை கட்டுவதற்கு சாமியார் கூறியுள்ளார். அதற்கு ஏன் என்று கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். அதற்கு சாமியார் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது கையில் இருக்கும் எலுமிச்சை பழம் மற்றும் பூஜை பொருட்கள் கீழே விழுந்துவிடும் அதற்காக தான் கட்டுகிறோம் எனக்கூறி கட்டி உள்ளனர்.அப்போது பின்னால் நின்று கிருஷ்ணவேணியை ஆட்டை பலி கொடுப்பது போன்று கத்தியால் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர். கிருஷ்ணவேணியிடம் இருந்த நகைகளை சாமியார் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது . இதையடுத்து கணவர் அசோக்ராஜூ, திருவண்ணாமலை சாமியார் கோவிந்தராஜ, பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர், மற்றொரு நபர் ஆகியோர் போலீஸ்யிடம் சிக்கினர். மனைவிக்கு தெரியாமல் குழந்தைகளை நரபலி கொடுக்கலாம் என முதலில் திட்டம் தீட்டியுள்ளனர், ஆனால் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை சாமியாரிடம் கூறியுள்ளார் . உடனே குழந்தைகளை விட கர்ப்பிணியை நரபலியாக கொடுத்தால் கூடுதல் செல்வமும் சிறப்பும் வந்து சேரும் என ஆசையை தூண்டி உள்ளார் சாமியார் . சாமியார் கோவிந்தராஜை கிருஷ்ணவேணி சித்தப்பா என பாசத்தோடு அழைத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது .

புதுச்சேரி: செப்டம்பர் 22, 2018 புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார்…

Read More

மாணவிடம் பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

சென்னை: செப்டம்பர் 22, 2018 சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி வாணி (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். அதனால் வாணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற வாணியிடம்குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் அருகில் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய வாணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் வாணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More