சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் வெளியானது. ‘பொதுநலன் கருதி’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு…
Read Moreமெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) உத்தரவிட்டும் வீடுகளை ஒதுக்கவில்லை: வருவாய்த் துறையினர் மீது புகார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு புறம்போக்கில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு 3 ஆண்டுகள் முடிந்தும், வருவாய்த் துறையினர் வீடுகளை இன்னும் ஒதுக்கவில்லை என புகார்கள் கூறப்படுகின்றன. சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் மயானப் புறம்போக்கில் பலர் வீடுகள் கட்டி, அதற்கு ராணி அண்ணா காலனி என பெயர் சூட்டி குடியிருந்து வந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டில், நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தைக் காலி செய்யுமாறு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர், கட்டடங்களை இடித்து அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதையடுத்து, அண்ணா காலனி குடியிருப்புவாசிகள் மற்றும் சில கட்சியினர் சேர்ந்து, இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 2015 மார்ச் 9 ஆம் தேதி, அண்ணா காலனி குடியிருப்புவாசிகளுக்கு…
Read Moreசந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!
சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read Moreஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து…
Read More15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி
மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள். செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால்…
Read Moreதிருமணம் முடிந்தவுடனே உணவு விருந்தில் சண்டையால் தம்பதியினர் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த உடன் தம்பதிக்குள் பிரச்சினை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே திருவிழாவாக காட்சி அளித்தது.காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், புகைப்படம் எடுப்பதில் தம்பதினர் ஓய்வில்லாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர். அங்கு நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் அது அதிகமாக முற்றியது. இரு வீட்டாரும் சமாதானம் செய்யவில்லை .அவர்களும் உணவுக் கூடத்தில் சண்டையிட்டனர்.பிறகு காவல்துறையினர் வந்தும் பயனில்லை .பின்னர் புதுமணத் தம்பதினர் தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். பிறகு…
Read Moreகும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில் இருக்கும் ஓர் வாடகைக் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம், 6ம் தேதி, திறக்கப்படவிருப்பதாக கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. News in English: Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.
Read Moreதமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு:பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை…
Read Moreகொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்
கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…
Read Moreகும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!
கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More



