செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள். இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில்…
Read More12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை சேர்ந்தவர் மனோகரன்(53). ஊசி போடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு நர்ஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர் நர்ஸ் வீட்டுக்கு சென்றபோது அங்கு அவர் இல்லை. அங்கு நுர்ஸ்யுடைய 12 வயது மகள் தனியாக இருந்ததால் அவரிடம் பேசியுள்ளார். வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார் . இதனால் அங்கிருந்து மனோகரன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் இதை பற்றி கூறியுள்ளார். இதையடுத்து இது சமந்தமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடந்த சம்பவம் அடிப்படையில் மனோகரனை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து பிறகு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். News Headline: 53-year-old Man was arrested…
Read Moreகூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உபயோகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம். சென்னை: 26பிப்ரவரி2019. சென்னை ஆலந்தூரில் இருக்கும் படவேட்டம்மன் கோவிலில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோக படுத்தப்படுவதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளிலும், மேலும் விஷேச நாட்களிலும் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதாக கோவிலுக்கு அருகே குடி இருக்கும் 75 வயது முதியவரான எம்.பீட்டர் வழக்கு தொடுத்துள்ளார். தன் வீட்டு ஜன்னலருகே வைக்கப்பட்டிருக்கும் 3 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது, ஆகையால் வயதான தனக்கும், தன் மனைவிக்கும் மட்டுமின்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தனது பேரனுக்கும் காலை முதல் இரவு வரையில் இந்த அமைதியற்ற சூழலும், அரசியல் அமைப்பு சட்ட்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வுரிமையையும் பறிக்கும் வகையாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு…
Read Moreஅம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை 26 பிப்ரவரி 2019: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தை சார்ந்த குணநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2008ம் ஆண்டில் சட்டப் படிப்பு முடித்து 2010ல் வக்கீல்களுக்கான தேசிய தகுதி தேர்விலும் தேர்ச்சி அடைந்தேன். தற்சமயம் திருச்சி சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். கடந்த 2014ல் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 50 விரிவுரையாளர்களுக்கன பணியிடங்கள் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் பிரிவுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டது. கடந்த மூன்று முறையும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆகவே, பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்ற அறிவிப்பாணையின்படி சட்டப் பல்கலைகழக விரிவுரையாளர் பணி எனக்கு வழங்குமாறு…
Read Moreநீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் படுகாயம் அடைந்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு ஆதரவாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு…
Read Moreஅரசு ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு! உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என நிரூபணம் ஆனதால், வேல்துரை தானே முன்வந்து பெற்ற ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஊதியமாக பெற்ற 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல்துரை. அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும்,…
Read Moreலஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: ‘அரசாங்க சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து, துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று, உயர்நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது. மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பின்வருமாறு: தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வு நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது. பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும்…
Read Moreசட்டவிரோதமாக கைது செய்யும் நடவடிக்கை: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
சட்டவிரோதமாக கைது செய்யும் விவகாரம்: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுககு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! மாணவர் இக்குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட தயங்காது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மரக் கடத்தல் வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்ட மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக, மனுதாரர் கைது செய்யப்பட்டதாக, மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை…
Read Moreவிதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை
கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவின்ப்படி கொடைக்கானலில் விதிமீறி கட்டிய கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து முடக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 ‘மாஸ்டர் பிளான்’ கட்டுமான வரைமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் 43 கட்டடங்களுக்கு ‘சீல்’ செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் விதிமீறலுக்குட்பட்ட கட்டடங்களின் அறிக்கை நகராட்சியிடம் கோரப்பட்டது. இதில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் 1,415, அவற்றை சீல் வைத்து மார்ச் 11 ம் தேதி அறிக்கையளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஆயத்தமாயினர்.தகவலறிந்த வணிகர் சங்கம் மற்றும் பொதுநலச்சங்கம், பாதிக்கப்பட்டோர்…
Read Moreதோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது
டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…
Read More

