மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி எட்டு மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மாணவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

Read More

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம்

டெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் , கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.தடைகளையும், கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இரண்டு வாரங்களுக்குள்…

Read More

ஊதிய உயர்வு கோரிய துப்புரவுப் பணியாளர்கள் வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்று சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துப்புரவுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூபாய் 5730 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 21500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.எங்களுக்கும் அதே ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் 14ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Read More

சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது .ஆனால் தற்போது 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் 320 ரூபாய்க்கும் கர்நாடகாவில் 335 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Read More

தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை…

Read More

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது

டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது.ஜூலை மாதம் இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தது.இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால் இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளதால், அதற்க்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.…

Read More

அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Read More

அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.மேலும் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி உள்ளார். இந்த வழக்கில் கடந்த 2019 மார்ச் 21ஆம் தேதி அட்டாக் பாண்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உடல் நல பாதிப்பால் அறுவைச் சிகிச்சை செய்ய போகிறார். அறுவைச் சிகிச்சையின் போது உடனிருந்து கவனிக்க கணவருக்கு பரோல் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரோல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.ஆனால்…

Read More

அழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: மகளிர் நல சமூக அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது .டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே,ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அழைப்பூர்திகளில் பயணிக்கும் பெண்களின் வன்கொடுமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Read More

ஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read More