சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது
- தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
அடுத்த செய்தி →: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கியது

