தேசிய பாதுகாப்பு கருதி சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை

Social media banned for Army officers

Social media banned for Army officers

தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற செய்தியின் காரணமாக ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சமீபகால்மாக சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.இதையடுத்து வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது.

இராணுவத்தினரின் இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் சமீபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரும், கப்பற்படை அதிகாரி ஒருவரும் சாட்டிங் மூலம் ராணுவ ரகசியங்கள் குறித்து பேசியதாக வெளியான தகவலை அடுத்த அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றியே இந்திய ராணுவமும் இந்த தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Social media banned for Army officers

Fearing that national security could be compromised, the Army has asked its personnel not to use social media like Facebook and WeChat which may have servers abroad.

Related posts