Kenya bus crash kills 41 near Narok கென்யத் தலைநகர் நைரோபி அருகே பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் உருண்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விபத்தை நேரில் கண்ட போக்குவரத்துக் காவலர் சாமுவேல் கிமாரு கூறுகையில், இந்த இடத்தைப் பார்ப்பதற்கே படு கோரமாக இருக்கிறது. திரும்பி இடமெல்லாம் பிணங்களாகக் கிடக்கின்றன.எதனால் விபத்து நடந்தது என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றாலும், அளவுக்கு அதிகமான வேகம், அத்துடன் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். Kenya bus crash kills 41 near Narok At least 41 people have been killed in a bus crash near the Kenyan town of Narok, west of the capital Nairobi,…
Read Moreபோதை பொருளால் எனது வாழ்க்கை பறிபோகிறது: மைக் டைசன்
உலகின் பிரபல முன்னாள் நட்சத்திர ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், போதை பொருள் மற்றும் பொறுமை இன்மை காரணத்தால் என் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருக்கின்றது என வேதனைப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90களில் விமர்சனத்துக்குள்ளான அவர், 1992ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பின்பு அவர் விடுதலையானார். அதனையடுத்து மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் மைக் டைசன் கலந்துகொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார். அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேஷன் பட்டத்திற்காக 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார். இதில், இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து மைக் டைசன் துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக்…
Read Moreதட்டைக் கழுவ மறுத்த சிறுவனை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்
boy shot dead for refusing to clean plates தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர், தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி, தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார். ஆனால், அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…
Read Moreமைதான உதவியாளரை கட்டிபிடித்து அழுத டென்னிஸ் வீராங்கனை
Serena Williams opponent needs hug from ball boy during rout செரீனாவிடம் தோல்வி அடைந்த வீராங்கனை பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் செரீனா வில்லியம்ஸுக்கும், பிரான்செஸ்காகவுக்கும் இடையிலான போட்டியில் அனல் பறந்தது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய செரீனா, 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக பிரான்செஸ்காவை வீழ்த்தினார். செரீனாவின் அதிரடி வேகத்தை சமாளிக்க முடியாமல் சுருண்டு போன பிரான்செஸ்கா, அங்கிருந்த பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை அணுகி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபரிடமிருந்து மீண்டு வந்த பிரான்செஸ்கா பின்னர் கூறுகையில், அந்த நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது செய்தேன். அந்த பால் பாயிடம், செரீனா மிகவும் கடுமையாக ஆடினார், ரொம்பக் கஷ்டம்…
Read Moreஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனிதமூளை! விஞ்ஞானிகள் முயற்சி
Scientists grow mini human brains from stem cells முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன. இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச் தெரிவித்துள்ளார்.…
Read Moreவிஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை
arrest warrant for vijayakanth அடுத்த வாய்தாவுக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விடுத்தது. 2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, விஜயகாந்த் மீது முதல்வர் சார்பில் அரசு வக்கீல் எம்.எஸ் ஜெகன், செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 13ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1ம் தேதி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த…
Read Moreநவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ
Lessons Learned and Reconciliation Commission நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம். சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால்…
Read Moreபராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்
Sacked Paraguay bus drivers stage crucifixion protest பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழக்க வேண்டும் எனக் கூறி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து போராடி வருகின்றனர் பராகுவேயைச் சேர்ந்த 8 ஊழியர்கள். பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியானில் செயல்பட்டு வரும் வேன்கார்டியா என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் கூடுதல் நேர பணிக்கான ஊதியம், மருத்துவப்படி,ஓய்வூதியம் வழங்க வேண்டி அதன் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 8 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது பேருந்து நிறுவனம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக தங்களை தாங்களே சிலுவையில் அறைந்துக்கொண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஊழியரின் மனைவி ஒருவரும் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின்…
Read Moreடாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்
Hackers target Tata servers research organisations இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழகம் ஆகியவற்றின் சர்வர்களில் ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விஷமிகள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் அவர்கள் விஷமம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக் செய்த ஆவணங்களை ஒரு இணையதளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரோவுக்கு மின்னணுவியல் கழகம் கொடுத்த ஒரு ஒப்பந்த ஆவணமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மின்னணுவியல் கழகத்திற்கு கொடுத்த ரூ. 39 கோடி மதிப்பிலான பணி ஒப்பந்த உத்தரவின் விவரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனற். லடாக்கில் மேஸ் தொலைநோக்கியை நிறுவி, அதை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. ஹேக்கர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hackers target Tata servers research organisations The website…
Read Moreஇந்திய கடல் சார்ந்த தகவல் தொடர்புக்கு புதிய செயற்கைகோள்
India’s set to launch satellite No71 – GSAT-7 கடல் சார்ந்த தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் செயற்கைகோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. பாதுகாப்பு செயற்கைகோள் : இஸ்ரோ சார்பில் கடல் தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் பாதுகாப்பு செயற்கைகோள் பிரான்சு நாட்டின் காயான நகரில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் கடல் சார்ந்த பாதுகாப்பு விஷங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த ஜிசாட்–7 செயற்கைகோள். இது கடல் தகவல் தொடர்புகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். இதை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்திய கடல் எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக வழங்கும். ரூ.470 கோடி செலவு : இதுகுறித்து ஒரு மூத்த விண்வெளி…
Read More



