விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை

arrest warrant for vijayakanth அடுத்த வாய்தாவுக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லையென்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு  விடுத்தது. 2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, விஜயகாந்த் மீது முதல்வர் சார்பில் அரசு வக்கீல் எம்.எஸ் ஜெகன், செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 13ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது. ஜூலை வரை 11 வாய்தாக்கள் நடைபெற்றன. இதில் விஜயகாந்த் ஆஜர் ஆகவில்லை. ஜூலை 1ம் தேதி முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இது தொடர்பாக விஜயகாந்த்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் விளக்கம் கொடுத்ததால் பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த…

Read More விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!! செஷன்ஸ் கோர்ட் எச்சரிக்கை

நவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ

Lessons Learned and Reconciliation Commission நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம். சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால்…

Read More நவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ

பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்

Sacked Paraguay bus drivers stage crucifixion protest பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழக்க வேண்டும் எனக் கூறி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து போராடி வருகின்றனர் பராகுவேயைச் சேர்ந்த 8 ஊழியர்கள். பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியானில் செயல்பட்டு வரும் வேன்கார்டியா என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் கூடுதல் நேர பணிக்கான ஊதியம், மருத்துவப்படி,ஓய்வூதியம் வழங்க வேண்டி அதன் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 8 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது பேருந்து நிறுவனம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக தங்களை தாங்களே சிலுவையில் அறைந்துக்கொண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஊழியரின் மனைவி ஒருவரும் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின்…

Read More பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்

டாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்

Hackers target Tata servers research organisations இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழகம் ஆகியவற்றின் சர்வர்களில் ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விஷமிகள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் அவர்கள் விஷமம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக் செய்த ஆவணங்களை ஒரு இணையதளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரோவுக்கு மின்னணுவியல் கழகம் கொடுத்த ஒரு ஒப்பந்த ஆவணமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மின்னணுவியல் கழகத்திற்கு கொடுத்த ரூ. 39 கோடி மதிப்பிலான பணி ஒப்பந்த உத்தரவின் விவரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனற். லடாக்கில் மேஸ் தொலைநோக்கியை நிறுவி, அதை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. ஹேக்கர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hackers target Tata servers research organisations The website…

Read More டாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்

இந்திய கடல் சார்ந்த தகவல் தொடர்புக்கு புதிய செயற்கைகோள்

India’s set to launch satellite No71 – GSAT-7 கடல் சார்ந்த தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் செயற்கைகோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. பாதுகாப்பு செயற்கைகோள் : இஸ்ரோ சார்பில் கடல் தகவல் தொடர்புக்காக இந்தியாவின் முதல் பாதுகாப்பு செயற்கைகோள் பிரான்சு நாட்டின் காயான நகரில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவின் கடல் சார்ந்த பாதுகாப்பு விஷங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த ஜிசாட்–7 செயற்கைகோள். இது கடல் தகவல் தொடர்புகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். இதை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்திய கடல் எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக வழங்கும். ரூ.470 கோடி செலவு : இதுகுறித்து ஒரு மூத்த விண்வெளி…

Read More இந்திய கடல் சார்ந்த தகவல் தொடர்புக்கு புதிய செயற்கைகோள்

தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை??.

Back to power shortage அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின்நிலையல் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் 1,200 மெகாவாட் வரை மின் தேவை கூடியுள்ளது. மேலும் காற்றாலையும் திடீரென கைவிட்டதால் 3 மாதத்துக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார தடை மீண்டும் அமலாகி உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 12,500 முதல் 13,000 மெகாவாட் ஆக உள்ளது. சுமார் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை இருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால், வெப்பத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மின்தேவையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் 5 மணி நேரமும், நகர்ப்புறங்களில் 3 மணி…

Read More தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை??.

மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!

Steve Ballmer’s Biggest Mistakes As CEO Of Microsoft  உலகின் முன்னனி நிறுவனங்களில் ஓன்றாக மைக்கிரோசாப்ட் விளங்கி வருகிறது. இப்பொழுது மைக்கிரோசாப்டின் சிஈஓவாக இருப்பவர் ஸ்டீவ் பால்மர் என்பது நமக்கு தெரிந்ததே. இவர் அடுத்த சில மாதங்களுக்குள் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மைக்கிரோசாப்டின் அடுத்த சிஈஓ யார் என்ற கேள்வி டெக்னாலஜி உலகில் பரவ தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகில் உள்ள வல்லுநர்கள் பல பெயர்களை இதற்க்கு பரிந்துரை செய்கின்றனர். ஸ்டீவ் பால்மரின் ஓய்வுக்கு பின்னர் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும். ஸ்டீவ் பால்மர் சிஈஓவாக இருந்த தனது பதவி காலத்தில் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் நலனுக்காக பல நல்ல விஷியங்களை செய்துள்ளார். நிறுவனத்தின் லாபங்களை அதிகரித்துள்ளார். அதே சமயம் அவர் தனது பதவி காலத்தில் நிறைய தவறுகளையும் செய்துள்ளார்…

Read More மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!

சென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: முதல்வர் அறிவிப்பு

New fee for Auto Rickshaw தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்க தொழிற்சங்கங்கள் கோரின.இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 10ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகர ராவ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 9…

Read More சென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் நாசவேலை??. 40 கிலோ வெடி பொருட்கள் பதுக்கள்??.

pak sleeper cells infiltrate into tn with 40 kg explosives தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது.…

Read More தமிழகத்தில் நாசவேலை??. 40 கிலோ வெடி பொருட்கள் பதுக்கள்??.

14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது

Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை…

Read More 14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது