கர்நாடக சட்டப்பேரவை தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது – உச்சநீதிமன்றம்

டெல்லி:ஆளும் கர்நாடக காங்கிரஸ் – மஜத எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். ஆனால் அவர் விலகல் கடிதம் சமந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத காரணத்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சட்டப்பேரவைத் தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். “எந்த அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கிறார்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Read More

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ராஜஸ்தான்: அரசியல் அமைப்பு சட்டத்தில் பிரிவு 14ல் இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதித்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது .இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு எழுதப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Read More

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:தேசிய பசுமைத் தீர்பாயத்தில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Read More

நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:ஆர்.லக்‌ஷ்மி பிரபா என்பவர் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதி உள்ளதால் அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் பி.இ. படிப்பை முடித்திருந்ததால் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.ஆர்.லக்‌ஷ்மி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். நீதிபதி கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Read More

அயோத்தி வழக்கில் சமரசக் குழு ஜூலை 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறி 1992ல் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கு என மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.மீதம் உள்ள பகுதியை , ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த…

Read More

டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு தடை இல்லை : டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று டெல்லி மாநில அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு பெண்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது..இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து மனுதரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More

ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை:தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் , இது குறித்து பத்திரிகைகளில் தினம்தோறும் செய்திகள் வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இந்த விசாரணையில் ஆணவக்கொலையை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல உத்தரவை பிறப்பித்தது.தமிழகத்தில் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க உத்தவிட்டனர்.மேலும் மத்திய அரசு ஆணவக்கொலைகளை தடுப்பதற்காக ஒரு வரைவு சட்டத்தை தயாரித்தது.அந்த சட்டத்தின் தற்போதைய நிலை பற்றி பதில் அளிக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Read More

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.

Read More

மகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

Read More

மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

Read More