சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
Read MoreYear: 2019
அட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
மதுரை: 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.மேலும் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி உள்ளார். இந்த வழக்கில் கடந்த 2019 மார்ச் 21ஆம் தேதி அட்டாக் பாண்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உடல் நல பாதிப்பால் அறுவைச் சிகிச்சை செய்ய போகிறார். அறுவைச் சிகிச்சையின் போது உடனிருந்து கவனிக்க கணவருக்கு பரோல் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரோல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.ஆனால்…
Read Moreஅழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
டெல்லி: மகளிர் நல சமூக அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது .டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே,ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அழைப்பூர்திகளில் பயணிக்கும் பெண்களின் வன்கொடுமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அழைப்பூர்திகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
Read Moreஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read Moreஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி…
Read Moreகொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்
சென்னை: கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோரின் வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த மூவருக்கும் திருநெல்வேலி நீதிமன்றம் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreஎழுதப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணம் என்ன? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்தன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.தமிழ் மற்றும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. பிறகு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனு விசாரணைக்கு வந்தபோது தபால் துறை தேர்வுகள் ரத்து…
Read Moreநிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.கஜா புயலால் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்களும் நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதனால் உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பலர் போராடினார்கள் .போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஆனால் காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60…
Read Moreமருத்துவ மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயத்ததை விட கூடுதலாக வசூலித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Read Moreஅயோத்தி வழக்கில் இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த சமரச குழுவிற்கு அனுமதி- உச்சநீதிமன்றம்
டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது.வரும் ஜூலை 31ம் தேதி வரை அதாவது இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Read More