எழுதப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணம் என்ன? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்தன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.தமிழ் மற்றும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. பிறகு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனு விசாரணைக்கு வந்தபோது தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

Related posts