கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் திறன் படைத்தவர்களாக விளங்கி வருகின்றனர். பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், முதன்மை செயல் அதிகாரிகள், தமிழக காவல்துறை தலைவர் என பெண்கள் பலவித உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.மென்பொருள் நிறுவனங்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்; ஊரகப்பகுதிகளில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 89.5 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். பால் உற்பத்தி தொழிலில் 94 சதவீத பெண்கள் பணியாற்றுவதாக உலக வங்கி ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது. மேலும் பெண்களின் பணி திறன் குறித்து 17 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பெண்களின் தன்னம்பிக்கை 70 சதவீதமாகவும், சீனா பெண்கள் 68 சதவீதமும், பிரேசில் பெண்களின் அளவு 58 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பெண்கள் 29…
Read MoreYear: 2014
உலக சிறுநீரக தினம்
world kidney day ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்ப டும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப் படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும்…
Read Moreபகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்
Indira assassin”s son joins Bahujan Samaj Party முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அவருடைய வீட்டில் அவருடைய பாதுகாவலர்களான பியாந்த் சிங் (வயது 33) மற்றும் சத்வந்த்சிங் (26) என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது மற்ற பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குலில் பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே பலியானான். சத்வந்த் சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திரா கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா. சிரோன்மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியில் சேர்ந்தார். இவர், கடந்த 2007 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு…
Read Moreமார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மாதர் தினம்
International Women’s Day March 8 இன்று சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க படுகிறது.பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் 1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்டகாரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள்…
Read Moreஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ள கூடாது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
People should cut their sugar intake to just six teaspoons a day ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அது கூறியுள்ளது. 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொண்டால், அது உ டல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று விடுமாம். புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல்…
Read Moreஅமெரிக்காவில் தொடர்ந்து காணாமல் போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள்
Indian-origin student reported missing in US அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து காணாமல் போவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளோரிடாவில் உள்ள கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்ற 21 வயது மாணவர் ரெனி ஜோசை கடந்த திங்கள்கிழமை முதல் காணவில்லை. நண்பர்களிடம் கடற்கரையில் நடந்துவிட்டு வருவதாக சொன்ன ஜோஸின் உடைகள், மொபைல் போன் மற்றும் உடைமைகள் ஒரு குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து ஜாஸ்மின் ஜோசப் என்னும் 22 வயது இளம்பெண் மாயமாகியுள்ளார். இவரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன் வர்கீஸ் காணாமல் போய் இலினியாஸில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Indian-origin student reported missing in US A 22-year-old…
Read Moreபழைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜனவரி ஒன்றம் தேதி வரை பயன்படுத்தலாம்
2005- ம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடபடாத ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ளலாம் என்றும் மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. தற்பொழுது அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி மேலும் 9 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.எனவே வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் : பழைய ரூபாய்கள் செல்லாதவையே, ஆனால் பெரும்பாலான பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுவிட்டன. எனவே மீதம் உள்ள நோட்டுகளை மேலும் மாற்றிக்கொள்ள 9 மாதம் கால அவகாசம் அளிக்கபடுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை எந்த வித அசவுகரியமு மின்றி…
Read Moreஅமெரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் மருந்து கண்டுபிடிப்பு
2nd HIV baby seemingly cured of virus in Los Angeles சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாகவும் இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய்…
Read Moreசீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டது
The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday. பீஜிங்: அமெரிக்க தனியார் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவில் உள்ள சோங்கிங் எனும் நகரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday.
Read Moreதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழி ஆம் ஆத்மி கட்சியில்
Tamilnadu Chief minister J.Jayalalitha School mate and Former AIADMK MLA Bader Saeed today joined the state unit of AAP and is likely to contest the coming elections, the AAP Authority said today. சென்னை: தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பதர் சயீத் இன்று ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர் லெனின் வெளியிட்டுள்ளார். Tamilnadu Chief minister J.Jayalalitha School mate and Former AIADMK MLA Bader Saeed today joined the state unit of AAP and is likely to contest in election
Read More