துணிச்சலுக்கான சர்வதேச விருது அமிலம் வீச்சில் பாதிக்கபட்ட இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது

Indian woman receives International Women of Courage Award துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு…

Read More

உலகில் மிக அதிகம் குண்டுவெடிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம்

India among most dangerous places in the world   குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் நடக்கிறதாம். குண்டுவெடிப்புகளை பொறுத்த வரையில் உலகின் 3வது அபாயகரமான நாடு இந்தியா தானாம். தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை விட அதிகம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு 108 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஈராக்கை அடுத்து இந்தியாவில் தான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றது.  உள்நாட்டு பிரச்சனையால் தவிக்கும் வங்கதேசத்தில் 75 குண்டுவெடிப்புகளும், சிரியாவில் 36 குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 241 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 212 ஆக…

Read More

கெஜ்ரிவால் நரேந்திரமோடியை எதிர்த்து போட்டி?

நரேந்திரமோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி?

Read More

அசாமில் பிரசாரத்தின் போது ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொலை

Assam woman who attended Rahul event dies of burn injuries, police say she’s not the one who kissed him அஸ்ஸாமில் ராகுல் காந்தி பயணம் செய்த போது, அவருக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது கணவரும் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் கடைசி நாளான்று கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசுமபொது.’நாட்டின் வளர்ச்சியில் எல்லா துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், எம்.பி., எம்எல்ஏ பதவிகளை பெண்களுக்கு…

Read More

பிப்ரவரி 28 இந்திய தேசிய அறிவியல் தினம்

National Science Day observed across India on 28 February தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க்து/அநேகமாக. தேசத் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி…

Read More

நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மூட நம்பிக்கையால் தன் குழந்தையின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்தே கொன்றற்

Nigerian dad ‘Locked Son’s Mouth With Padlock Because he Wouldn’t Stop Screaming Then Beat him to Death’ நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவரது மகனை பேய் பிடித்துவிட்டதாக கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் வாயை பூட்டி அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியாவை சேர்ந்தவர் க்றிஸ் எல்விஸ். இவருக்கு வயது 30. சமீபத்தில் இவருக்கு குடும்பத்தில் சில துயர சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கு தனது குழந்தைக்கு பேய் பிடித்தது தான் காரணமென எண்ணிய எல்விஸ் குழந்தையின் வாயை பூட்டி, அடிக்க துவங்கினார். மேலும், குழந்தையின் உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு பூட்டி வைத்துள்ளார். வெளியே சென்ற சிறுவனின் தாய் வீடு திரும்பிய போது சிறுவனை காணாததால் பதற்றம் அடைந்து, எல்விசிடம்…

Read More

காணமல் போன டிசிஎஸ் பெண் ஊழியர் ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டர்

TCS woman techie found dead near Chennai சென்னை அருகே, டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவரைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸிலும் புகார் தரப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுசேரி ஐடி பூங்காவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அருகிலேயே அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் உமா மகேஸ்வரி. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேடவாகத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.  கடந்த 13ஆம் தேதி பணிக்கு சென்ற உமா மகேஸ்வரி அன்று மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால்…

Read More

நாட்டிலேயே வரதட்சனை கொடுமையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

Andhra Pradesh tops list in dowry cases in 2012 நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன. ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது. மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது. அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை…

Read More

பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம்

பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம்

Today is International Mother Language Day உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. இந்நிலையில் உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர்.…

Read More

இந்தியாவில் 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது

McKinsey pegs poverty line at Rs 1,336 per month இந்தியாவின் மக்கள் தொகையான 1.1 பில்லியனில் 55 சதவீதம் பேர்- அதாவது 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுவந்த நிலையில் நாட்டில் சுமார் 68 கோடி மக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் எடுக்கப் பட்ட மற்றொரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.  பாதுகாப்பு,கல்வி, சுகாதாரம், தண்ணீர், வீடு, எரிபொருள், மற்றும் சமூகபாதுகாப்பு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் குறைந்த பட்ச தேவையை பூர்த்தி செய்வது அடிப்படை வசதிகளாக கருதப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பூர்த்தி செய்வதற்காக தனிநபர் பொருளாதார மதிப்பீடு மூலம் புதிய வரி உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு தனி மனிதனின் மாத தேவைக்கு சராசரியாக…

Read More