17 வயது பெண்ணை பலாத்காரம் செய்து பீரோவில் பூட்டிய கொடூரம்

 A woman in Karnataka was raped and was locked in a bureau கர்நாடகாவில் 17 வயது இளம்பெண்ணைக் கற்பழித்து மயங்கிய அவரை பீரோவில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் இந்தப்பெண். இந்தப் பெண் தினமும் தனது சின்னம்மா வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கமாம். அதேபோல் நேற்று முந்தினமும் இரவு 10.30 மணியளவில் இவர் சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் இந்தப் பெண்ணை வழிமறித்து வாயில் துணியைத் திணித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.  பின்னர் அவரை கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. மயங்கிய பெண்ணை பீரோவில் வைத்துப் பூட்டியுள்ளார் நாகேஷ். தினமும் வரும்…

Read More

வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி

Gun rampage at Washington navy yard leaves 13 people dead அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று பேர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மிகவும் பாதுகாப்பான பகுதியான இங்கு தைரியமாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர்களில் 50 வயதான ஒரு வெள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ராணுவ உடையில் வந்த மற்ற இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவன் 50 வயதுமதிக்கத்தக்க கறுப்பர் என்று கூறப்படுகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கும் நூற்றுக்கணக்கான போலீசார்…

Read More

சேதுசமுத்திர வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

Centre brushes aside TN govt’s objection on Sethusamudram சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய கப்பல் அமைச்சகம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. இத் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் மத்திய அரசு கோரியுள்ளது. இத் திட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே தமிழக அரசு, முதல்வர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மத்திய கப்பல் துறையின் மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தொடர்பாக மத்திய கப்பல் அமைச்சக துணைச் செயலர் அனந்த் கிஷோர் சரண் தாக்கல் செய்த மனுவின்…

Read More

எயிட்ஸ் நோயைக் முற்றிலுமாக அழிக்க புதிய மருந்து விரைவில்

Vaccine Clears HIV-Like Virus In Monkeys அமெரிக்க ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த எஸ்.ஐ. வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்துள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குரங்குகளை பாதிக்கும் எச்.ஐ.வி போன்ற எஸ். ஐ, வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மருந்து அளிக்கப்பட்ட 16 குரங்குகளில் 9 குரங்குகளின் உடலில் இருந்து இந்த எஸ்.ஐ.வி தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் லூயிஸ் பிக்கர் தெரிவித்தபோது, எங்களின் ஆய்வில் நாங்கள் உபயோகப்படுத்திய மருந்தை செலுத்தியப்போது, சில செல்களை நாங்கள் தவறுதலாக விட்டிருக்கலாம், ஆனால், இந்த மருந்து குரங்குகளின் உடலில் ஒரு செல்லில் கூட அந்த தொற்று இல்லாதவாறு செயல்பட்டது எனக்…

Read More

17 வது குழந்தைக்காக காத்திருக்கும் அதிசய தம்பதி

Baby no 17 on way for UK’s biggest family இங்கிலாந்தில் உள்ள ஒரு தம்பதி 23 வருடங்களாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை பெற்றுவருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லன்கஷைர் பகுதியை சேர்ந்தவர் ரட்போர்ட். 38 வயதாகும் இவரது கணவர் நோயல், இவருக்கு வயது 41. இந்த தம்பதி தற்போது அவர்களின் 17 வது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். இந்த தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு ’15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்’ (15 Kids And Counting) என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள். இவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களின் மகன் காஸ்பர் பிறந்ததால் 16 ஆனது. இந்நிலையில் தனது 17 குழந்தைக்காக காத்திருக்கும் ராட்போர்ட் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், எங்கள் குடும்பத்தில் 17 வது உறுப்பினரின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன்…

Read More

37 மில்லியன் டாலர் மதிப்பிலான ராக்கெட்டை விண்ணில் ஏவியது ஜப்பான்

Japan Launches Leaner Space Program   ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது. 37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய…

Read More

மெக்சிகோவில் இன்கிரிட் புயல் தாக்கியதில் 24 பேர் பலியாகினர்

Storm and hurricane batter Mexico   மெக்சிகோவில் புயல் தாக்கியதில் 24 பேர் பலியாகினர். மெக்சிகோவில் பசிபிக் கடலில் இன்கிரிட் என்ற புயல் உருவானது. அது பலவீனம் அடைந்து மான்ஷானியோ துறைமுக பகுதியில் கரையை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. அதை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டது. குயரெரோ கடற்கரை மாகாணத்தில் அகாபுல்கோ புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. அதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். 3 பேர் ஆற்று வெள்ளத்திலும், ஒருவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தும் இறந்தனர். குயெர்ரோ நகரில் மலைப்பகுதியில் வாகனம் கவிழ்ந்து உருண்டதில் 8 பேர் பலியாகினர். அது போன்று பியூப்லா, ஒயாசாகா உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துள்ளனர். மொத்தத்தில் மெக்சிகோவில் புயலில்…

Read More

மாற்று அழகி போட்டி நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

‘Muslimah World’: Indonesians hold Islam’s answer to Miss World  இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு காரணமாக, அங்கு நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் நீச்சல் உடை சுற்றுகளை போட்டியாளர்கள் ரத்து செய்து விட்டனர். அதே போல் கடற்கரையில் குளியல் ஆடையில் தோன்றும் சுற்றும் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அழகி போட்டியை எதிர்த்து மாற்று அழகி போட்டி ஒன்றை நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஈகா “இஸ்லாமிய உலகம் இயல்பிலேயே அழகானது. தன்னம்பிக்கையும், நன்னடத்தையும், ஆன்மிக மனமும் தான் தற்போது உலகம் முழுவதும் பெண்களுக்கு தேவையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பெண்களை வெறும் உடல்…

Read More

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற இந்திய வம்சவாளி பெண் நீனா

Miss New York crowned 2014 Miss America   அமெரிக்காவின் 2014-ம் ஆண்டுக்கான அழகி போட்டி நியுயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளிப் வம்சாவளியை சார்ந்த பெண்னான நீனா தவுலூரி தேர்வாகியுள்ளார். இதன் மூலம் இந்த வகையில் அமெரிக்காவின் சிறந்த அழகியாக தேர்வான முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  நீச்சல் உடை அணிவகுப்பு, நடனம், பாடல், நடுவர்களின் சமஜோதிமான கேள்விகள் என்பவற்றுடன் 50 மாநிலங்களின் 50 போட்டியாளர்களை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் நியூயோர்க் மாநில அழகியான நீனா தவுலூரி. 24 வயதான இவருக்கு இதன் மூலம் 50,000 அமெரிக்க டாலர் பெறுமதியான பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் பாலிவூட் ஸ்டைலில் பிஃயூசன் நடனமாடி அனைவரையும் அசரவைத்திருந்தார் நீனா. நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்றியது.…

Read More

கேதர்நாத் வெள்ள இடிபாடுகளில் கிடந்த வங்கி லாக்கரில் ரூ1.90 கோடி

State Bank locker found at Kedarnath with Rs 1.90 crore. கேதர்நாத்தில் பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பகுதிகளை செம்மைபடுத்தும் போது ரூ.1.90 கோடி ரொக்க பணம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் இடிபாடுகளின் இடையே இருந்தது கண்டெடுக்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தினால் பாதிக்கபடிந்த பதிப்பு அடைந்த கேதர்நாத் பகுதியில் உள்ள பிரபலமான சிவன் கோவிலில் 86 நாட்கள் நாட்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமையன்று பூஜைகள் மீண்டும் நடக்கத் துடங்கியது. கேதர்நாத்தில் பூஜைகளை துவங்கும் துவங்குவதற்கு முன்பு இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்பொழுது கடந்த 8ம் தேதியன்று இடிபாடுகளுக்கு நடுவே பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இந்த லாக்கர் குறித்து டேராடூனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று, கண்டெடுக்க பட்ட லாக்கரை வங்கி…

Read More