உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்து அமெரிக்கர் சாதனை

25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car அமெரிக்கர் ஒருவர், உலகிலேயே மிகவும் சிறிய கார் ஒன்றை வடிவமைத்து, தயாரித்து, அதை சாலையில் ஓட்டி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது தயாரிப்பை இடம் பெறச் செய்துள்ளார். இவரது பெயர் திரு ஆஸ்டின் கால்சன், இவர் கார் வடிவமைக்கும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பல வித்தியாசமான கார்களை வடிவமைத்துள்ள திரு ஆஸ்டின் கால்சன்,  தான் எதாவது புதுமை படைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய மிக சிறிய கார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மிகச் சிறிய காரை சாலையில் ஓட்டுவதற்கு சில அத்தியாவசிய அம்சங்கள் தேவைப்பட்டன. அதன் அடிபடையில், ஒலிப்பான், பாதுகாப்பு கண்ணாடி, மற்றும் சீட் பெல்ட் போன்ற பொருட்கள் சேர்த்து…

Read More

கிணற்றில் விழுந்த 38 வயது பெண் 15 நாட்களுக்கு பின் மீட்பு

Chinese woman survives 15 days in well சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (வயது 38). இவர் கடந்த 1-ம் தேதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று, மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ…

Read More

ஜிம்பாவ்வே கிரிக்கெட் வீரர் படுக்கை அறைக்குள் 8 அடி நீள முதலை

Former Test cricketer Guy Whittall finds crocodile under his bed  ஜிம்பாவ்வேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கெய் வெட்டல் (40). இவர் ஜிம்பாவ்வே நாட்டின் மாஜி கிரிக்கெட் வீரர் ஆவார்.  இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு, குடியிருப்பையும் அமைத்து வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு தனது படுக்கையறையில் படுத்து ஹை வெட்டல் உறங்கத் தொடங்கினார். அப்போது அவரது அறைக்குள் சுமார் 8 அடி நீள முதலை ஒன்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்தது. இது எதுவும் கெய் வெட்டலுக்கு தெரியாமல் நன்றாக குறட்டை விட்டு உறங்கினார். அறைக்குள் புகுந்த முதலை நைசாக இவரது கட்டிலுக்கு அடியில் புகுந்தது. அங்கு டைல்ஸ் தரையில் ஹாயாக உறங்கியது. காலையில் கண்…

Read More

வங்கதேச ஆயுள் தண்டனை கைதி மேல் முறையீட்டில் மரண தண்டனை

Abdul Kader Mullah Gets Death Penalty For War Crimes பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971-ம் ஆண்டு நடந்த போரில், பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் அப்துல் குவாதர் முல்லாவிற்கு மேல் முறையீட்டில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் பிப்ரவரியில், 65 வயதான அப்துல் குவாதர் முல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஒருவருக்கு கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்று முல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர்,…

Read More

இத்தாலியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலை மீட்பு

Costa Concordia: Stricken ship set upright in Italy கிக்லியோ போர்ட்டோ: இத்தாலி கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் இத்தாலியின் கடற்கரை கிராமமான டஸ்கன் தீவு அருகே வந்தது. கப்பலில் 4,200 பயணிகள் இருந்தனர். கடற்கரைக்கு அருகில் வந்தவுடன் பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்தது. அப்போது கடலில் மூழ்கி 32 பேர் இறந்தனர். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட இந்தக் கப்பலை மீட்கும் பணியில் கப்பல் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் கடந்த ஒரு…

Read More

லண்டன் பள்ளி வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை

Indian-origin teacher in UK gives birth in classroom  இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும்,…

Read More

தென் அமெரிக்காவில் சிறைக்கலவரம் 16 கைதிகள் வெட்டிக்கொலை

At least 16 dead in Venezuela prison clash  வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமான கைதிகள் அடைக்கப்…

Read More

இந்த வருடமும் பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடம்

Gates stays atop Forbes list of America’s richest மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. Gates stays atop Forbes list of America’s richest  America’s superrich just keep getting richer.Forbes…

Read More

தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

Orissa HC judge elevated to Supreme Court  உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் – வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நாகப்பன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.யு.சி.யும், மதுரை மதுரா கல்லூரியில் பி.எஸ்.சி.…

Read More

விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று முதல் காஷ்மீரி பெண்

This Kashmir teen is all set to spread her wings   காஷ்மீரை சேர்ந்த ஒரு இளம்பெண், மிக இளைய வயதில் விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று சாதனை புரிந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயிஷா அசிஸ்.இவரது வயது 17. சிறு வயது முதலே பெண்கள் அதிகம் சாதிக்காத துறையில் சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் வளர்ந்த இப்பெண் தற்போது மிக இளைய வயதில் ஒரு விமானத்தை செலுத்த உரிமம் பெற்ற முதல் காஷ்மீரி பெண் ஆவார். கடந்த ஆண்டு நாசாவில் நடத்தப்பட்ட விண்வெளி பயிற்சி முகாமில் பங்கேற்க இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஆயிஷாவும் ஒருவர் ஆவார். நாசாவிற்கு சென்று ஆயிஷா, அவரது ரோல் மாடலான சுனிதா வில்லியம்ஸை சந்தித்து பேசியுள்ளார். இதனை பெருமிதத்துடன் தெரிவிக்கும் ஆயிஷா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.…

Read More