போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை

போலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார் . சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வரும்காலத்தில் போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள்…

Read More

அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார் .மனுவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகள் அரசியல் கட்சியினர் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டு சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் , மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகளை அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக தோண்டுவதை கட்டுப்படுத்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொடிக்கம்பங்கள் நடுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பாதிக்க படுவதாக குறிப்பிட்டுள்ளார்.பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க 2016-ம் ஆண்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கம்பங்களை அகற்ற ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மீதம் உள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுவிட்டார்கள்.

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார் .மனுவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகள் அரசியல் கட்சியினர் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டு சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் , மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகளை அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக தோண்டுவதை கட்டுப்படுத்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொடிக்கம்பங்கள் நடுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு பாதிக்க…

Read More

அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய்

அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய் பிகார்:பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா பகுதியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் தாய் கோபம் அடைந்துள்ளார் . குழந்தை அழுத காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான அந்த தாய் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பினார் குழந்தையின் தந்தை .குழந்தை ஏன் அமைதியாகவே இருக்கிறது என்று அருகில் சென்ற போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வருவதை கண்டறிந்தார். இதுகுறித்த விசாரித்தபோது போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பிகார்:பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா பகுதியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் தாய் கோபம் அடைந்துள்ளார் . குழந்தை அழுத காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான அந்த தாய் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய குழந்தையின் தந்தை,குழந்தை ஏன் அமைதியாகவே இருக்கிறது என்று அருகில் சென்ற போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வருவதை கண்டறிந்தார். இதுகுறித்த விசாரித்தபோது போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More

தாம்பரத்தில் பெண்ணை கொன்று விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் கைது

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) மற்றும் அவரது கணவர் தாம்பரத்தில் குணசேகரன்(54) என்பவரின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள்.குணசேகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் இருப்பதால் அதை பராமரித்து வந்தார்கள்.தேவி மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திடீர் என இருவரும் காணவில்லை.குணசேகரன் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்து இதை பெரிதாக நினைக்கவில்லை.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலையில் குணசேகரன் நிலத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் தொட்டியில் பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த தேவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலை கைப்பற்றிய காவல்துறை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read More

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது புதுடெல்லி: ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது .ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி: ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது . அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Read More

லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6…

Read More

சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் "ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419, 420, 468, 471, 506(வீ) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்திவருகின்றனர்.மோசடி செய்த பணத்தில் நிலங்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியது தெரியவந்துள்ளது.

சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419,…

Read More

தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட்

தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட் ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் குற்றவாளி திருநாவுக்கரசு

ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி திருநாவுக்கரசு. பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று பாதுகாப்பு நலன் கருதி பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேரில் ஆஜராக்காமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் .அதில் திருநாவுக்கரசை நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல்வேறு தகவல்களை திருநாவுக்கரசு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக வெளிவந்துள்ளன. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று பாதுகாப்பு நலன் கருதி பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேரில் ஆஜராக்காமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் .அதில் திருநாவுக்கரசை நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவிட்டது அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல்வேறு தகவல்களை திருநாவுக்கரசு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக வெளிவந்துள்ளன. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read More