தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக. இதையும் படியுங்கள் தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள் அயோத்தி வழக்கில் முஸ்லிமிற்கு சார்பாக வாதாடும் வழக்கறிஞரை மிரட்டியதால் சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் அவதூறு நோட்டீஸ் டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன்…

Read More தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்

டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி மற்றும் மற்றவர் மேல் வழக்கு தொடர்ந்தார்.நேஷனல் ஹெரால்ட் வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது.காந்தியின் வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா சுப்பிரமணியன் சுவாமியிடம் ஹிந்தியில் பேசினார்.அதற்கு சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் என்றும் நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் அதனால் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தார். அதற்கு நீதிபதி நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எனவே இரண்டையும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞரிடம் நீங்கள் பேசும் ஹிந்தி எனக்கு புரியவில்லை என்றும் எனக்கு சமஸ்கிருதம் கலந்த…

Read More டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நான் தமிழன் உங்கள் இந்தி எனக்கு புரியவில்லை என்று வழக்கறிஞரிடம் வாக்குவாதம்

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.பழைய ரூபாய் 1000, 500 ஆகிய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது மத்திய அரசு.மதுரையைச் சேர்ந்த ராமன் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார்.ஆனால் வங்கி மறுத்தது.இதனால் ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ராமன் மனு அனுப்பினார்.ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது .பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராமர். மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய்…

Read More பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி…

Read More லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி:முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக மசோதா நிறைவேறியது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன் படி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இதையும் படியுங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Read More முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Chennai Highcourt

சென்னை: கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் கணவன் பராமரிப்பில் உள்ளனர்.மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையும் படியுங்கள் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை…

Read More போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.பிறகு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது.இதனால் எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்புள்ளது.டெல்லியில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிற்கு கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.அவர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்க வாய்ப்புள்ளது. இதையும் படியுங்கள் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்…

Read More டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:.கடந்த ஜனவரி மாதம் சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பிரிவு மாணவ மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றனர்.சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக முதல்வருக்கு மாணவிகள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மனுவை தள்ளுபடி செய்ததோடு, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.…

Read More கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை உயர்நீதிமன்றம்

மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி எட்டு மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மாணவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார். இதையும் படியுங்கள் கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு- சென்னை…

Read More மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம்

டெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் , கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.தடைகளையும், கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இரண்டு வாரங்களுக்குள்…

Read More காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம்