Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். * ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…
Read MoreAuthor: NR Sharavanan
பப்பாளி பழத்தின் மகிமை
IMPORTANCE OF PAPAYA பப்பாளி பழத்தின் மகிமை பப்பாளி பழத்தில் வைட்ட மின் ஏ† உயிர் சத்து இருக்கிறது. பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்புகள் பலப் படவும், பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன் தருகிறது . பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சத்து உள்ளது . இது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் . அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. பப்பாளி பழம் ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது . பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் பெண்கலுக்கு உண்டாகும் மாதவிடாய் குறைபாடு சீராகும். பப்பாளி பழத்தில் உள்ள வைட்ட மின் ஏ உயிர் சத்து கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது .
Read Moreதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்!!
Right To Information Act in India : Political parties under the Right 2013 ஜூன்.4 : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு நிதி உள்ளது மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தகவல்களை இந்த சட்டத்தின் கீழ் மக்கள் பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது. முன்னதாக சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மனு ஒன்றை அளித்திருந்தார்கள். சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த அனில் பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள் ஏராளமாக நன்கொடைகள் பெறுகின்றன. இந்த நன்கொடைகள் யார் யாரிடமிருந்து கிடைத்தன…
Read Moreதந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
russian story by j.Jayalalitha ஸ்ரீரங்கம், 2013 ஜூன்.4 – : தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், அவரது மகன் ஸ்டாலினையும், கடுமையாகச் சாடி, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில், குட்டிக் கதை கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:- சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி, இவையெல்லாம் வெறும் அறிவிப்புகள் என குதர்க்கமாகத் தெரிவித்தார். அவரது மகன் மு.க. ஸ்டாலின் “இது 110 ஆட்சி’ என்று கூறி “இதில் 50 சதவீதத்தையாவது நிறைவேற்ற முடியுமா?’ எனக் கேட்கிறார். இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். விதி 110-ன்…
Read Moreசேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி
sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன் 2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…
Read Moreகைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு
porur junction bridge not yet Completed பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும்…
Read Moreபில்கேட்ஸ் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம்.
bill gates willing to meet actor amir khan உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பில்கேட்ஸ், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் பில்கேட்ஸ் தன்னுடைய இணையத்தில் கூறியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமீர்கான் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக…
Read Moreஐ பி எல் போட்டியால் அவமானம் தான் வருமானம்: ரணதுங்கா
sri lankan cricketer ranathunga ஐ.பி.எல் தொடரால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் தான் கிடைத்தது என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த வீரர்கள் புக்கிகள் என்று பலர் கைதாகினர். இத்தொடர் குறித்து மக்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையின் ரணதுங்கா கூறுகையில், ஐ.பி.எல் தொடரில் பிக்சிங் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், தொடக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன. இத்தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன், 2008 ம் ஆண்டில் எச்சரித்தார். அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் பெட்டிங், பிக்சிங், போதை என்று ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது. ஐ.பி.எல் தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலக கிரிக்கெட்டுக்குத் தான்…
Read Moreஅல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்பு
al qaeda chemical weapons factory in iraq ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும்…
Read Moreபெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவு
Heavy rain in bangalore பெங்களூரில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவக் காற்று ஜூன் 2-ம் திகதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் மே 30, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. சனிக்கிழமை காலை(ஜூன் 1) எடுக்கப்பட்ட மழை அளவுப்படி, பெங்களூரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. பெங்களூரில் கடந்த 1891-ம் ஆண்டு, ஜூன் 16-ம் திகதி எடுக்கப்பட்ட மழை அளவின்படி, பெங்களூரில் 101.6 மி.மீ மழை பதிவானது. இதுவே பெங்களூரில் ஜூன் மாதங்களில் பெய்த மழையில் அதிக அளவாகும். 122 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை(ஜூன் 1) 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது…
Read More