கேதர்நாத்தில் 200க்கு மேற்பட்ட கிராமங்கள் அழிந்தன 5000 பேர் சாவு

200 villages destroyed in uttarakhand flood ஜூன். 23 -2013 : புது டெல்லி:  உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ருத்ரபிரயாகை, சமோலி ஆகிய 2 மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர்நாத், ருத்ரபிரயாகை வழித்தடம் சின்னாபின்னமாகி விட்டது. அந்த சாலையை செப்பனிடவே 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 200 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ரபிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம் பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்பு குழுக்களை அனுப்பி…

Read More

தமிழ்நாட்டில் 15 புதிய பாலங்கள் – அரசு அலுவலக கட்டிடங்கள் திறப்பு

15 new bridges and government building opened in tamilnadu தமிழகத்தில் ரூ.58 கோடியில் கட்டப்பட்ட 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் புதிய பாலங்களை அவர் திறந்தார். இதற்கான நிகழ்ச்சி கடந்த 20- ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில், கிளியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், விழுப்புரம் மாவட்டம், அகரக்கோட்டாலத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், அரியலூர் மாவட்டம், குழுமூரில் ஆணைவாரி ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் ரயில்வே கடவு எண் 130-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் மங்கலத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர்…

Read More

சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .

pakistani black money in swiss banks சூரிச் : மக்கள் தொகையிலும்,  பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும். சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது.…

Read More

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பா.ம.க

பாமக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. பாமக முன்னரே அறிவித்தபடி  எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு இல்லை, ஆதரவும் இல்லை என்பதற்கேற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் அன்புமணி ராமதாஸ். தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read More

வருகிறது மலிவு விலை அம்மா மினரல் வாட்டர் கேன்

low cost mineral water bottle tamilnadu குறைந்த விலையில் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு அம்மா மினரல் வாட்டர்  என்று  உற்பத்தி நிலையம் அமைக்க படும் என்று  முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா  அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிக்கையில் அறிவித்துள்ளார். இங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.…

Read More

சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More

நாசாவில் புதிய 8 விண்வெளி வீரர்கள்: அதில் பாதி பேர் பெண்கள்

NASA announces 8 new astronauts : 4 Women ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில், சூரிய குடும்ப ஆராய்ச்சிக்காக புதிய தலைமுறை விண்வெளி ஆராய்சியாளர்கள் தேர்வு செய்ய பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள். முன்னதாக சுமார் 6000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8 பேர் மட்டுமே தெர்தெஉக்க பட்டனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிக அளவில் பெண்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. நாசாவின் தலைமை நிர்வாகி திரு சார்லஸ் போல்டன் கூறுகையில், அமெரிக்காவின் இந்த புதிய முயற்சி வான்வெளியில் முன் எப்போதும் இல்லாத திடமான புதிய திட்டமாக திகழும் என குறிபிட்டுள்ளார். புதிய விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என நாசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NASA announces 8 new astronauts English Summary: Nasa…

Read More

வட இந்தியாவில் பேய் மழை.132 பேர் பலி?.

Flood in UTTARAKHAND North india: வட இந்தியாவின் உத்திரகாந்த் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெல்ல பெருக்கு ஏற்பட்டு, நூற்றுகணகானோர் பலியாகியுள்ளனர். மேலும் இமாலய மலையடிவாரபகுதிகளில் நிலச்சரிவினாலும் பலர் பலியாகியும், மீட்புபணிகள் பாதிக்கப்பட்டும் இருக்கிறது. மேலும் லட்சக்கணக்காண மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும், இழந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளுக்கு உதவியாக  இராணுவ வீரர்கள் பலர்  ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 75,000 பயணிகள் சிக்கிக்கொண்டு மீட்பு குழுவினர் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் என நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  Flood in UTTARAKHAND North india:  The holy town of Kedarnath, standing at a height of 11,760 feet and surrounded by majestic snow-capped peaks, was a picture of devastation…

Read More

தமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்

New Tamilnadu ministers of aiadmk  Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான்  மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர்  தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக  துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல்  மரபினர்  அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…

Read More

காலை இழந்த அருனிமா எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

arunima sinha, first amputee to climb Mount Everest தன்னம்பிக்கையின் சிகரமாய் விளங்கிய அருனிமா சிங்கா தன் ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25). உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை தைரியத்துடன் விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை. இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள் , ஓடும் ரயிலில் இருந்து வெளியே அருனிமாவை தூக்கி வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை…

Read More