தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.

பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai

Read More

பள்ளி வேன் கவிழ்ந்து ஒரு மாணவர் பலி, 7 மாணவர்கள் படுகாயம்

அதிகாலை இன்று (26.6.13) பல்லாவரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 7 மாணவர்கள் படுகாயம் ஒரு மாணவர் பலியானார் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே தனியார் பள்ளி வேல்ஸ் வித்யாஷ்ரம் வேன் கவிழ்து 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் ஆனால் 9ம் வகுப்பு மாணவரான தீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். pallavarm school bus accident. student deth

Read More

ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்

Edward Snowden பெய்ஜிங்: அமெரிக்காவின் தேச துரோகியாக கருதப்படும் எட்வர்ட் ஸ்நொவ்டெனனுக்கு அடைகலம் கொடுக்கவேண்டாம் என நேற்று அமெரிக்கா கேட்டுகொண்டிருந்த நிலையில், சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தொலைகாட்சியில் அவரை சிறந்த சிந்தனையாளர் என்றும் புரட்சியாளராகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் சுமுகமான உறவு நிலைக்கவேண்டுமெனில் ஸ்நொவ்டெனுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் எனவும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு சீனாவை அமெரிக்க வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே… China’s state newspaper praises Edward Snowden for ‘tearing off Washington’s sanctimonious mask’ Edward Snowden

Read More

தமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.

tamilnadu government enterprises ready to buy NLC shares நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பேச்சுகள் இருந்தன. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த மே 23-ஆம் தேதி தங்களுக்கு கடிதம்…

Read More

கவியரசன் கண்ணதாசன் 87வது பிறந்தநாள்

Tamil poet kannadasan birthday இன்று உலக தமிழர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த வித்தக கவிஞன் கவியரசன் கண்ணதாசன் அவர்களின் 87வது பிறந்தநாள்  கண்ணதாசன் ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருதுபெற்றவர். தமிழ் வார்த்தைகளால் சொற்களை கவிதை நயத்தில் கையாண்டு கவிதையாய் கொடுத்து தமிழ் மக்கள் மனதில் இன்றும் கடவுளாய் உலா வருபவர் கவிஅரசன் கண்ணதாசன், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு தனித் தனியே வரிகள் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இருவரும் தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க கண்ணதாசனும்…

Read More

கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை

india wins Cricket Mini world cup மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் பொட்டில் இந்திய அபார ஆட்டத்தினால் இங்கிலாந்தை 5ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. 2002-ல் இலங்கையுடன் மினி உலகக் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கோப்பையை வென்றுள்ளது. பர்மிங்காம்மில் இறுதிப்போட்டியில்  இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி  சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கை பற்றியது, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிர்ப்பகல் 3.00 மணி அளவில் தொடங்குவதாக இருந்தது மழையின் காரணமாக நேரம் மற்றும் ஆட்ட நேரமும் குறைக்கப்பட்டது .டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் துவங்குமா என்ற கேள்விக்குறி ஆனது. 5மணி நேரம் கழித்து ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ரசிகர்களும்…

Read More

இன்று வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலவு

பௌர்ணமி தினமான இன்று(ஞாயிறு,23/06/2013) வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான…

Read More

60 நாட்கள் தூங்காமல் இருந்த மைக்கல் ஜாக்சன்

மறைந்த உலகப்பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஹார்டுவர்ட் மெடிகல் ஸ்கூல் ஸ்லீப் எக்ஸ்பெர்ட் (Harvard Medical School sleep expert, Charles Czeisler) என்பவர் தனது அறிக்கையில், மைகேல் ஜாக்சன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கேல் ஜாக்சனாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த Dr. Murray அறியவில்லை என்றும், இதற்காக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் மைக்கேல் ஜாக்சனின் தாயார் தெரிவித்துள்ளார். Michael…

Read More

கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம்.…

Read More

தமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக  பாடசாலை கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. இந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பாடசாலைக்கு செல்ல முடிவதில்லை. இதையடுத்து நாளைமுதல் (திங்கட்கிழமை) முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பாடசாலை துவங்கும், மாலை, 4:15க்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     Government school timing changed. Tamilnadu government

Read More