இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்­துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விம­ல­ஜோதி தேரர் பேச்சு

Srilanka Religious issue இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர்  பேச்சு  இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார். பொது ­ப­ல­சே­னா வின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்­லா­விடின் அவர்­களை ஓட…

Read More

அவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Vijayakanth gets exemption from appearing in court சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில்…

Read More

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி

Karunanithi blames Jayalaithaa for not constructing Maduravoyal Elevated high way சென்னை, ஆக. 13- : தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.…

Read More

உணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடி

Narendra Modi உணவு பாதுகாப்பு மசோதா சாதாரண மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏற்கனவே பிரதமருக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா சாமானிய மக்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாகிவிடும் என்றும்,ஊட்டச்சத்து குறைபாட்டினை எந்த வகையிலும் தீர்க்காது என்றும் கூறியுள்ளார். Narendra Modi

Read More

ஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்

indefinite strike in Andhra pradesh for Telangana statehood தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்ததால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து சேவையும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டைமாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது.  ஆந்திராவில் மின் வாரிய ஊழியர்கள் உள்பட 53 அரசு துறைகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலங்கானா அறிவிப்புக்கு எதிராக பதவி விலகவேண்டும் என்று ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்…

Read More

தீ பிடித்து எறியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடித்து எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் ராகுல். இக்குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில் இதுவரை 4 முறை தானாக தீப்பற்றியதால் கிராம மக்கள் இந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஸ்பான்டின் க்யூமன் கம்பன்ஷன் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இக்குழந்தையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து நாராயணபாபு கூறுகையில், குழந்தை ராகுலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குழந்தையின் வியர்வை, ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து வருகிறோம். எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் இவற்றை…

Read More

போர்க்கப்பல் விக்ராந்த் இந்திய கடற்படைத்தளத்தில்

INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. 260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும். இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும்…

Read More

கடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்

India launched its first aircraft carrier INS Vikrant உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது . இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் . Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France,…

Read More

சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி பாஜகவில் இணைந்தது

Subramanian Swamy Janata Party merges with BJP புதுதில்லி:12.ஆகஸ்ட்.2013: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார். ஜனதா கட்சித் தலை வர் சுப்ரமணியசாமி, பாஜ தலைவர்களுடன் சமீபகாலமாக நெருக்கமாக காணப்பட்டார். இந்நிலை யில், தனது கட்சியை பாஜ.வுடன் இணைப்பது பற்றி அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதை தொ டர்ந்து, பாஜ.வுடன் ஜனதா கட்சி இணைக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும்…

Read More

ஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.

Odessa Makanati soil decline in coal mining company ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது குல்டா வசுந்தரா என்ற கனிம சுரங்கம். இது மகாநதி சுரங்க பணிகள் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.  இதில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தின் நுழைவு வாயிலின் அருகே, நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, திடீரென சரிந்து விழுந்தது. இதில் 10 பேர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பலியாயினர். மேலும் 30 பேர் வரை மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என,…

Read More