தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம்

DMK leader M.karunanidhi’s letter to prime minister திருநெல்வேலி மாவட்டம்  மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும்,  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும்  அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும். இதேபோல் இரண்டாவது…

Read More

காரைக்கால் விநோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள்

காரைக்கால்:  காரைக்கால் வினோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வினோதினி கொலை வழக்கில் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி சுரேஷுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதியினி குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த வினோதினி பிப்ரவரி 12ல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Read More

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் புதிய வரி

new tax for importing electronics வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு…

Read More

அக்டோபர் மாதம்15ம் தேதிக்குள் மகளிர் வங்கிகள் துவக்க முடிவு

Women banks decided to start before October 15 முழுவதும் பெண்களால் இயக்கப்படும் மகளிர் வங்கிகள்  அக்டோபர் மாதம்  15ம் தேதிக்குள் சென்னையில் திறக்கப்படும்  என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்  நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, நாட்டிலேயே புதுமையாக முழுவதும் பெண்களால் இயக்கப்படும் , பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் வங்கிகள் துவக்கப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, இந்தூர் மற்றும் கவுகாத்தி நகரங்களில், மகளிர் வங்கிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பார்லிமென்டில் சமீபத்தில் 1,000 கோடி ரூபாய் துவக்க முதலீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மகளிர் வங்கி துவக்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் சென்னை உட்பட ஆறு இடங்களில் மகளிர்…

Read More

2023-ல் செவ்வாய் கிரகம் செல்ல பெங்களூர் வாசிகள் முன்பதிவு

நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. லாப நோக்கில்லாத இந்த அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும். செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம்பிப்பது முதல், அங்கு சென்று வாழும்வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது…

Read More

கச்சத்தீவை தரமுடியாது: இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை இந்தியாவுக்கு தரமுடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில்  பேசுகையில், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பித் தரும் பேச்சுக்கே இடமில்லை. இருநாட்டு பிரதமர்கள் செய்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யமுடியாது. இலங்கையில் தேர்தலை கண்காணிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு கொடுக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தலை வெளிப்படையாக நடத்த விரும்புகிறோம். இலங்கையில் போருக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 145 வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் போரின்போது…

Read More

தலைவா பட பிரச்சினை முதல்வருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார்

தலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட்டு 9ம் தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை. கடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனையானது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னோடு…

Read More

ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டது: பாஜக

UPA has pushed the nation hundred years back: Naqvi நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறான கொள்கைகளால் நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான 10 வருட ஆட்சியானது நாட்டை 100 வருடம் பின்னோக்கி தள்ளிவிட்டு இருக்கிறது. நாங்கள் உலகில் சிறந்தது என்று சொல்வது வழக்கம். ஆனால், இப்பொழுது உலகில் மிகவும் பின் தங்கிய என்று அது மாறியிருக்கிறது. நாடு மிகப்பெரிய பொருளாதாரப் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய அரசியல் பெருந்துயரமாக மாறியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. பொருளாதார உலகமயமாக்கல் உலகக்கடனில் திருப்பி விடப்பட்டிருக்கிறது. பாரதீய ஜனதா…

Read More

ஜப்பானின் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து

Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது. இதனால் எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லைட் போட்டு சென்றன. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக்குழம்பானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. இந்த ஆண்டில் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து சிதறியது என்று கூறப்படுகிறது. Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. Buying,…

Read More

பெரிய புத்தகம் சிறிய உருவம் சாதனை படைத்த ராஜஸ்தான் பெண்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார். “இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்’ என ஜோதி ஆம்கே தெரிவித்தார். இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.…

Read More