ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை

ISIS jihadists : Europe and USA are the next targets of Terrorist group ISIS Jihadists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிடில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இந்த நாடுகள் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அடுத்த இலக்காக இருக்கும் என சவுதிஅராபிய மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.. நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கான சந்திப்பில் சவுதி அராபிய மன்னர் அப்துல்லா இது பற்றி கூறியதாவது, நமது நட்பு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை புறக்கணித்தோமேயானால், அடுத்த மாதமே அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதற்கடுத்த மாதம் அமெரிக்காவிற்கும் குறி வைத்து தாக்க துவங்குவார்கள். இது உறுதி ஆகவே நாம் அனைவரும் இப்பொழுதே விழித்துக்கொண்டு அவர்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தீவிரவாததிற்கு எல்லைகள் கிடையாது. அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியில்…

Read More ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினால் விரைவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்து : சவுதி மன்னர் அப்துல்லா எச்சரிக்கை

அமெரிக்காவில் 9 வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தவறுதலாக பயிற்சியாளர் மிது குண்டு பாய்ந்து மரணம்

Shooting by 9-year-old girl stirs gun debate அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்லஸ் வாகா (39). லேக்கவுசு நகரை சேர்ந்த இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களின் 9 வயது மகள் ஒருவரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுவதற்காக சேர்த்தனர். அச்சிறுமிக்கு சார்லஸ் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இயந்திரத் துப்பாக்கி ஒன்றின் மூலம் சார்லஸ் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read More அமெரிக்காவில் 9 வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தவறுதலாக பயிற்சியாளர் மிது குண்டு பாய்ந்து மரணம்

இங்கிலாந்தில் கார்ட்டூன் போன்று தன் உருவத்தை மாற்றி கொண்ட 30 வயது பெண்

christina england lady changed like cartoon 1.5 crore spent இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரூ.1.5 கோடி செலவு செய்து கார்ட்டூன் உருவம் போல தன்னை மாற்றி இருக்கிறார். இங்கிலாந்தில் யோர்க்ஷையர் மாகாணம் வேக்பீல்டு நகரை சேர்ந்த 30 வயது பெண் கிறிஸ்டினா. இவர் லிபிசா நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்டினா சுற்றுலா சென்றிருந்த போது சாலையோர ஓவியர் ஒருவரை சந்தித்தார். அந்த ஓவியர் கிறிஸ்டினாவை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தை பார்த்ததும் கிறிஸ்டினாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த கார்ட்டூனை பார்க்கும்போதெல்லாம் தான் ஏன் அந்த ஓவியம் போல் மாறக் கூடாது என்ற எண்ணம் கிறிஸ்டினாவுக்கு தோன்றியது. அந்த ஆசையை அடக்க முடியாமல், கார்ட்டூன் உருவம் போல மாற முடிவு…

Read More இங்கிலாந்தில் கார்ட்டூன் போன்று தன் உருவத்தை மாற்றி கொண்ட 30 வயது பெண்

‘காதல் என்றால் என்ன?' விளக்கமளித்த 6 வயது சிறுமி இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது

What is love? 6-year-old’s wise note on love is an eye-opener for all of us 6 வயது சிறுமி ஒருவர் காதல் என்ற வார்த்தைக்கு அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இலண்டனைச் சேர்ந்த எம்மா என்ற 6 வயது சிறுமி தனது காதல் என்பது குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. உண்மையில் இது அச்சிறுமி எழுதியதுதானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. காகிதம் ஒன்றில் மழலையான எழுத்தில் காதலுக்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், “காதல் என்பது உங்கள் பற்களில் சில எப்போது காணாமல் போகிறதோ, அப்போதும் நீங்கள்…

Read More ‘காதல் என்றால் என்ன?' விளக்கமளித்த 6 வயது சிறுமி இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது

இங்கிலாந்தில் 3 வயது மகனை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மனிக்கு 11 ஆண்டு சிறை

Indian-origin woman gets 11 years in UK jail for son’s murder இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ் தீப் அதியோகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 3 வயதில் மிகாயில் குலார் என்ற மகன் இருந்தான். சம்பவத்தன்று இவர் தனது மகன் மிகாயில் குலாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தார். அதில் அவனது இடுப்பு, முதுகு, நாடி, முகம், கன்னம், தலை உள்ளிட்ட 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. எனவே, அவன் பரிதாபமாக இறந்தான். எனவே அவனது பிணத்தை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்தார். பின்னர் அதை காரில் 20 கி.மீட்டர் தூரம் எடுத்து சென்று கிர்க்கால்டி என்ற இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டின் பின்புறம் புதரில் வீசினார். தனது மகன் மிகாயில் குலாரை காணவில்லை என நாடக மாடினார். ஆனால்…

Read More இங்கிலாந்தில் 3 வயது மகனை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மனிக்கு 11 ஆண்டு சிறை

லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…

Read More லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..

An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…

Read More இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..

ஹாங்காங்கில் பெற்றோரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோ ஓவனில் சமைத்த மகன் கைது

Hong Kong: Son Accused of ‘Killing and Cooking His Parents’ Appears in Court பெற்றோரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோ ஓவனில் சமைத்து டிபன்பாக்ஸில் அடைத்து வைத்த மகன் கைது செய்யப்பட்டான். ஹாங்காங்கை சேர்ந்த தம்பதிகள் சா-வூங்-கி (வயது 65), சியூ-யூட்-ஈ (வயது 62). இவர்களது மகன் ஹென்றி ச்சு (வயது 30). கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தம்பதிகளை காணவில்லை. ஆனால் இதுகுறித்து மகன் அருகில் இருந்தவர்களிடம் தனது பெற்றோர்கள் சீனாவிற்கு சுற்றுபயணம் சென்று இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனது பெற்றோரை கொன்று விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஹென்றி ச்சு பெற்றோர்களின் தலையை தனியாக வெட்டி எடுத்து உப்புடன் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில்…

Read More ஹாங்காங்கில் பெற்றோரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோ ஓவனில் சமைத்த மகன் கைது

வங்காளதேசத்தில் 200 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

Sunken Bangladesh ferry with 200 people on board was ‘overcrowded’ வங்காளதேசத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் நீர்வழி போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆபத்து நிறைந்த அந்நாட்டின் ஆற்றுப் பகுதிகளை அன்றாடம் படகுகள் மூலம் கடந்து சென்று தங்களின் பிழைப்பை அவர்கள் நடத்தி வருகின்றனர். ஆறுகளில் திடீரென்று பாய்ந்து வரும் வெள்ளப் பெருக்கும், பெரும் சுழல்களும் இது வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளது. படகுகளின் கொள்ளளவையும் மீறி ஏராளமான மக்களை படகோட்டிகள் ஏற்றிச் செல்வதே விபத்துகளுக்கான மூலக்காரணம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், வங்காளதேச தலைநகர் டாக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் வழியாக பாய்ந்தோடும் பத்மா ஆற்றில் சுமார் 200 பயணிகளுடன் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததாகவும், தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இதுவரை 44 பயணிகளை மீட்டுள்ளதாகவும் டாக்காவில் இருந்து…

Read More வங்காளதேசத்தில் 200 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Antibiotics in chicken are making humans drug resistant: study கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. தேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல்…

Read More கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்