சென்னை: அக்டோபர் 08, 2018 புழுக்கமா இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம் .பிறகு விடிய காலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன். காலை பார்த்தபோது என் குழந்தையை காணவில்லை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுத்துருங்க சார் என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் . சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா – உமா இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பிறந்த இந்த ஆண் குழந்தை தான் சார்விக்.கதவை திறந்து வைத்து தூங்கிய போது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீஸ் விசாரணையில் இறங்கினார்கள். பெண் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுஇரவில் 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி…
Read More தாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்Category: தமிழக சிறகுகள்
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை
சென்னை: அக்டோபர் 04, 2018 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது என்னவென்றால் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. வழக்குகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் திறமையான நீதிபதிகளின் சேவைகள் தொடரும் வகையில் அவர்களுடைய பணி ஓய்வு வயதை உயர்த்த வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீதிபதிகளின் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் , காரணம் என்னவென்றால் வழக்கறிஞர்கள் பெறும் வருமானத்தை விட நீதிபதிகளின் வருமானம் குறைவாக உள்ளது என்று…
Read More நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கைவிபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது
சென்னை: அக்டோபர் 04, 2018 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில்…
Read More விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைதுதஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
தஞ்சாவூர்:செப்டம்பர் 29, 2018 சேகர் (வயது 55). என்பவர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதலில் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டிய பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித…
Read More தஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்செய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்
செய்யாறு: செப்டம்பர் 25, 2018 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் புதிய கட்டிடங்களின் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழா நடந்தது.நேற்று காலை 11 மணியளவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது நீதிமன்ற மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் வக்கீல் நாராயணன்(40) என்பவரின் முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். செய்யாறு பார் அசோசியேஷன் மற்றும் செய்யாறு அட்வகேட் அசோசியேஷன் சார்பில் இதை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுகளில் மேற்கூரை இடிந்து விழுவது இது 3வது முறை ஆகும் .…
Read More செய்யாறில் நீதிமன்றத்தின் மேற்கூறை விழுந்ததால் வக்கீல் படுகாயம்கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்
புதுச்சேரி: செப்டம்பர் 22, 2018 புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32), இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள காளிகோயிலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியது என்னவென்றால்: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அவ்வப்போது அசோக்ராஜூவின் வீட்டுக்கு சென்றுள்ளார் நண்பர் என்ற முறையில் . அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக விரும்புவதாக சாமியாரிடம் அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனே சாமியார்…
Read More கோடீஸ்வரராக ஆசைப்பட்டு மனைவியை நரபலி கொடுத்த கணவர்மாணவிடம் பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
சென்னை: செப்டம்பர் 22, 2018 சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி வாணி (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். அதனால் வாணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற வாணியிடம்குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் அருகில் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய வாணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் வாணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More மாணவிடம் பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைதுவிழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை வெட்டிவிட்டு கார் கொள்ளை
விழுப்புரம்: செப்டம்பர் 20, 2018 மதுரையை சேந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் டேனியல் தனது முதலாளியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் மதுரைக்கு செல்லும்போது தாம்பரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி காரில் எறியுள்ளனர்.கார் விராட்டுக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு கார், செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஆனது .தகவல் அறிந்த காவல் துறையினர் ஓட்டுநரை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில்அனுமதித்து தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More விழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை வெட்டிவிட்டு கார் கொள்ளைஇன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி .
சென்னை: செப்டம்பர் 15, 2018 இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி . பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனம் ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறையே காரணம்.நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இன்று சென்னையில் ஒரு பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை ஆகிறது . இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர் . இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
Read More இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி .புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்
சென்னை: 14th செப் 2018: சென்னையில் உள்ள புழல் சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் புழல் சிறையில் இருக்கும் 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார்என்றும் , அதில் முதல் வகுப்பு அறையில் 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 2 எப்எம்., வானொலிப்பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்