தமிழ்நாடு:பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்
கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…
Read Moreகும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!
கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Moreபொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது. லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .…
Read Moreகள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…
Read Moreசென்னையில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக் குத்து..
சென்னை: அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி வேணு. 15 வயதான இவரது மகன் பாபு அயப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து 2 மர்ம நபர்கள் இந்த மாடிக்கு வந்துள்ளனர் . பிறகு அந்த சிறுவனை சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள். இதனால் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர். பாபு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாபுவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஆபத்தான நிலையில்…
Read Moreநடிகை கொடுத்த பாலியல் புகார்.. பெங்களூர் போலீஸ் நடிகர் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு..
பெங்களூர்:அக்டோபர் 27, 2018 ‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன். அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு…
Read Moreமாணவியின் ஆடையை விலக்க சொன்ன ஆசிரியர்! மாணவர்கள் கண் முன் சரமாரியாக வெளுத்த உறவினர்கள்.
திருவண்ணாமலை:அக்டோபர் 22, 2018 ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு ஆசிரியர் சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது .இதன் காரணத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு பள்ளியை முற்றுகையிட்டனர். வகுப்பறையில் ஆசிரியர் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அந்த ஆசிரியரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார் . அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Read Moreகணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
தேவதானப்பட்டி: அக்டோபர் 09, 2018 கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன்…
Read Moreஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த…
Read More