இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு

FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott 25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில்  தம் பெயரையும்  சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott English Summary: FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a…

Read More இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு

தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை 25 April 2013  தமிழக சட்டசபையில், நேற்று விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம் அமைய இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள்,  230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85…

Read More தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். மந்திரி கமல்நாத் பதிலடி

BJP wants PM to resign, both Houses adjourned till noon பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். நாடாளுமன்ற இரு அவையும் நண்பகல் வரை ஒத்திவைப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி கமல்நாத் கூறுகையில்  “கடந்த 9 ஆண்டுகளில், பா.ஜ. க பிரதமரை  பல முறை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றது. அவர்கள் எதாவது பிரச்சினைகளையும் சம்பவங்களையும் முன்னிறுத்தி இதை முயன்று வருகின்றன. இந்த விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலம் கருதியும்  முன்னிருத்துகின்றன. இதில் மக்கள் நலம் ஒன்றும் இல்லை” என கூறினார். BJP wants PM to resign, both Houses adjourned till noon Real estate property in chennai  

Read More பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். மந்திரி கமல்நாத் பதிலடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

Parliament of India resumes today : 22April2013 திங்கள் – 22 ஏப்ரல்-2013:  நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது.  டெல்லி பாலியல் பலாத்காரம், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!! பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட உள்ள நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட  முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடியது. ரெயில் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி யும்,  2013-14-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 28-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு,  மார்ச் 21-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு  விடுமுறை விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நாளை மீண்டும் தொடங்குகின்றது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் விவாதங்கள் மற்றும்…

Read More நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

2002 குஜராத் கலவரம்: 10 பேருக்கு தூக்கு விதிக்க கோரும் மோடி அரசு..

அகமதாபாத், ஏப்ரல் 17-2013 – 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.க. முன்னாள் அமைச்சரும் மோடியின் ஆதரவாளருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திர மோடி அரசு திடீர் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள் 2002 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி…

Read More 2002 குஜராத் கலவரம்: 10 பேருக்கு தூக்கு விதிக்க கோரும் மோடி அரசு..

நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.

திருநெல்வேலி 17ஏப்ரல் 2013: முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடுத்த அவதுறு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகததால் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு  திராவிட கழகம் (DMDK) நிறுவனர் விஜயகாந்த்திற்கு எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பிக்க பட்டது. இவர் மேல் 23 வழக்குகள் நிலுவைளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Non bailable arrest warrant Vijayakanth flats

Read More நீதிமன்றம் விஜயகாந்த் எதிராக ஜாமீன் கிடைக்கா கைது வாரண்ட் பிறப்பித்தது.

ஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு .,

திருத்தணி செவ்வாய் 16ஏப்ரல் 2013 :  நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, மோசடி ஆவணங்கள் தயாரித்து தாக்கல் செய்து கோர்ட்டை ஏமாற்றி ஜாமின் பெற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இவர் எங்கே இருக்கிறார் என தேடி வந்த போலீசாருக்கு ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ.,வை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த  தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்தை மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் டி.எஸ்.பி., பாலச்சந்தர், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் கங்காதரன், ஏகாம்பரம் ஆகியோரை கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இவரை பிடிக்க வீடுகள் மற்றும் அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு அருகே இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற…

Read More ஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு .,

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி

தில்லி: 16Apr2013: “தில்லி சட்டப்பேரவை தேர்தலில் “ஆம் ஆத்மி’ கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டி. அவர் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது. “கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களைஆம் ஆத்மி’ கட்சி அலுவலகத்தில் அளிக்கலாம்’ என்றும் அக்கட்சி கூறியுள்ளது.  

Read More தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டி

பிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆட்சி மன்றக்குழு முடிவு: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும். இது விஷயத்தில் முடிவெடுக்க அக்குழுவுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவு கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில் இருக்காது. இதனை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மோடி…

Read More பிரதமர் வேட்பாளரை பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்