Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 120 பேர் ஆதரவாக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்தார் . இந்நிலையில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கரஸின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங், கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி ஆகியோர் பெங்களூர் விரைந்தனர். முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
தமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை
Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai Pan Masala and Gutka banned
Read Moreகரிகால் சோழனுக்கு மணி மண்டபம்: முதல்வர் அடிக்கல்
karikala cholan கரிகால் சோழனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா 6 மே 2013 ( திங்கள்கிழமை) நாட்டினார். இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் பென்னிகுயிக் நினைவு மண்டபம் விழாவின் போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் பழமையான அணைகளில் ஒன்றான கல்லணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையைப் போற்றி கௌரவிக்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் படி, ரூ.2.10 கோடியில் 4000 சதுர அடிப் பரப்பில் 32 அடி உயரம் கொண்ட அரங்கம், அதனைச் சுற்றி நான்கு புறங்களிலும் 28 அடி உயரத்தில் தூண்களுடன் கூடிய நான்கு முகப்பு மண்டபங்கள்…
Read Moreராமர் பலம் வர்ணம் பூசிய சேது சமுத்திர திட்டம்: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அறிக்கை
Adams bridge sethusamudram தி.மு.க பெயர் எடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே மக்கள் வரிப்பணம் பல கோடி செலவு செய்த பிறகு சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்: இந்திய தீபகற்பம் 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. இது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள்…
Read Moreகர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு
Karnataka state assembly election 2013 பெங்களூர் மே 5: கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கும் காங்கிரசிற்கும் கடுமையான போட்டி நிலவும் நிலையில். 70% வாக்கு பதிவானது. 2008 தேர்தலில் 64.91% பதிவானது குறிப்பிடத்தக்கது. Karnataka state assembly election 2013
Read Moreமின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி
மின்வெட்டை கண்டித்து தலைவர் விஜயகாந்த் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி தேமுதிக சார்பாக நடத்தவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மே 5 தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் தொடர்ந்து வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் பாதிப்புக்குள்ளான பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை மந்தநிலையை கண்டித்தும் மே 12-ஆம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து பேரணி புறப்படும். பின்னர் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த்துடன், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்றறு பேசுகின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read Moreசேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி திமுக தமிழகம் முழுவதும் மே 15ல் பொதுக்கூட்டம்
Sethusamudram Shipping Canal Project சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம். வடசென்னை கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பேச உள்ளார். க.அன்பழகன் கடலூரிலும், மு.க.ஸ்டாலின் கரூரிலும், துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர். Sethusamudram Shipping Canal Project
Read Moreசென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம்: முதல்வர் ஜெயலலிதா
New bus terminus to come at Vandalur சென்னை 01-மே-2013: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை 30 மே 2013 முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் :- தமது ஆட்சியில் சென்னை மாநகரில் பெருகிவரும் வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்டங்களுக்கு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்க படாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல நீண்ட நேரமாகிறது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையத்துக்குள்ளும், சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய…
Read Moreசமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்
புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. Property sale in Chennai Annanagar…
Read Moreவிஜயகாந்த் – திருமாவளவன் திடீர் சந்திப்பு
VCK leader Thirumavalavan calls on Vijayakant சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு,…
Read More