கோவை :கோவையில் உள்ள சேரன்மா நகரை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மாதம் 17ஆம் தேதி வழக்கம் போல் வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார்,பிறகு வெளியே செல்வதற்கு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது தான் பெட்ரோல் திருடப்பட்டதை உணர்த்தார். பிறகு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது நூதனமாக முறையில் அவரது பெட்ரோலை இளைஞர்கள் திருடியது தெரியவந்தது.கேமராவில் 2 இளைஞர்கள் முதலில் ஆள் இல்லாதபோது பெட்ரோல் வரும் இடத்தில் கேனை வைத்துவிட்டு செல்கிறார்கள் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் மீண்டு அந்த கேனை எடுத்து செல்கிறார்கள். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடதக்கது.
Read MoreCategory: நீதி சிறகுகள்
நீதி சிறகுகள்
Law news
கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் 31 பேர் வேலை பார்த்து வந்தனர் .அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியானம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனமக்கள் ஆவார்கள்.இவர்கள் ஜெயபால் என்பவரிடம் ஒரு குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை பார்க்க வந்துள்ளனர். 3 ஆண்டுக்கும் மேலாக பெற்ற பணத்திற்காக கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்ததால் இது சம்மந்தமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு 31 பேரையும் மீட்டு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது
ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு பஸ் நிலையத்தில் இரண்டு நாள் முன்பு குண்டு வீசியதில் இரண்டு பேர் பலியானார்கள் மற்றும் 32 பேர் காயம் அடைந்தனர். இது சம்மந்தமாக ஒருவனை போலீசார் கைது செய்தனர் .அவனை விசாரித்தபோது அவன் கூறியது “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த வெடிகுண்டை ஜம்மு பஸ் நிலையத்தில் வீசினால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் நான் வீசினேன்”என்று கூறினான். இந்த சிறுவனிடம் வெடிகுண்டை வழங்கியது ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி முசாமில் என்பது தெரிந்தவுடன் அவனையும் போலீசார் கைது செய்தனர் . அவனை விசாரித்தபோது இவன் கூறுகையில் “குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பயாஸ் என்னிடம் வெடிகுண்டை கொடுத்து மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் எறியும்படி கூறினான். ஆனால் எனக்கு…
Read Moreசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட்
சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க…
Read Moreஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
Read Moreதிருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !
சென்னை: 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் . இதற்கு காரணம் திருமணத்தை மீறிய உறவுகள் தான். இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள், டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் பற்றியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக திருமணத்துக்கு மீறிய உறவுகளை கணவனோ, மனைவியோ வைத்துக்கொள்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் குறித்து மத்திய மற்றும் மாநில…
Read Moreஅரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்
சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.
Read Moreசின்னத்திரை சீரியல், சினிமாவின் தாக்கத்தினால் சீரழிகிறதா குடும்ப உறவு ? : சென்னை உயர் நீதிமன்றம்
திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை தொடர் மற்றும் சினிமா தான் காரணமாக இருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருமண உறவை மீறிய உறவு வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை சீரியல்களும், சினிமாவும் காரணமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். . மேலும், ஆண் மற்றும் பெண்கள் சுயமாக பொருள் ஈட்டினாலும், இருவர் பொருளாதார உயர்வினாலும் இதுபோன்ற உறவுகள் அதிகரிக்கிறதா எனவும் பேஸ்புக், வாட்ஸ் -அப் போன்ற சமூக வலைதளங்கள் திருமண உறவை…
Read Moreசென்னை அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய வடமாநில இளைஞர்!
சென்னை: அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வடமாநில இளைஞர் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் கட்டுக்கட்டாக பணம் செலுத்தி உள்ளார். அவரிடம் அருகில் இருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை பற்றி அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் தெரிவித்தார். பிறகு காவலர்கள் சம்மந்தப்பட்ட இளைஞரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது தட்டுத் தடுமாறி தான் பதிலளித்தார் . அவரிடம் இருந்த மொத்த பணம் ரூ.17.8 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது . பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் ரத்தர் சாகிப் (29) என்றும் ,சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்ததும்…
Read Moreபறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read More