சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) மற்றும் அவரது கணவர் தாம்பரத்தில் குணசேகரன்(54) என்பவரின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள்.குணசேகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் இருப்பதால் அதை பராமரித்து வந்தார்கள்.தேவி மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திடீர் என இருவரும் காணவில்லை.குணசேகரன் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்து இதை பெரிதாக நினைக்கவில்லை.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலையில் குணசேகரன் நிலத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் தொட்டியில் பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த தேவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலை கைப்பற்றிய காவல்துறை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…
Read MoreCategory: நீதி சிறகுகள்
நீதி சிறகுகள்
Law news
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Read Moreடெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது
புதுடெல்லி: ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது . அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
Read Moreலஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6…
Read Moreஇந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை: 19 மார்ச் : வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?…
Read Moreசென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி
சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419,…
Read Moreஇரயில்வே நில ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, மார்ச் 19 இரயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப் பட்டதற்கான நடவடிக்கைகள் பற்றி தெற்கு இரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சார்ந்த பிரபாகர் தாக்கல் செய்துள்ள மனு: தெற்கு இரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை சில தனியார் அமைப் புகள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இரயில் நிலைய வளாகத்தில் சில அமைப்புகள் சார்பாக அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் போர்டு, பேனர்களை தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளது. இவைகளால் இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. மேலும் இரயில்வே துறைக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரங்கள் வரைந்துள்ளார்கள்.…
Read Moreதகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.
Read Moreபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் குற்றவாளி திருநாவுக்கரசு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று பாதுகாப்பு நலன் கருதி பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேரில் ஆஜராக்காமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் .அதில் திருநாவுக்கரசை நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவிட்டது அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல்வேறு தகவல்களை திருநாவுக்கரசு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக வெளிவந்துள்ளன. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read Moreஅரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை
மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More