FIR against Sheila Dikshit : Court orders FIR against Sheila Dikshit for misusing funds for poll ads தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2008ம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் அரசு நிதியை தவறான முறையில் பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. தகவல் கேட்பு ஆர்வலர் விவேக் கர்க், பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் சிறப்பு நீதிபதி நரோத்தம் கௌஷல் விசாரணை மேற்கொண்டார். இந்த இரு மனுக்களிலும் ரூ.22.56 கோடியை 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், ஊழல் தடுப்புச்…
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி பெட்ரோல் பங்கை இரவு மூட முடிவு
Government decides to close the petrol pumps at night பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க இரவு 8:00 மணி முதல் காலை 8:00 மணி வரை வரை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன் படி 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பரிந்துரைத்துள்ளார் . அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள்…
Read Moreஅரசு ஊழியர்களுக்கு 3ஆண்டுக்கு பின் 10% அகவிலைப்படி உயர்கிறது
After 3 years government employees get 10% dearness allowance தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக அகவிலைப்படி உள்ளது. இதை 10 % உயர்த்தி 90 % மாக ஆக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் வெளியிடபடுகிறது. தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாதம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி கொடுக்கபடுகிறது. கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த 8 % அகவிலைப்படிஉயர்வால் 72 % தில் இருந்து 80 % மாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 % மானால் 90%த்தை எட்டும். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்கள்.ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி…
Read Moreகல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை
West Bengal minister severely beaten up by public and held hostage ராம்புரத்: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார். அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் மந்திரியை பிடித்து அடித்து உதைத்து, கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்த மந்திரியை மீட்க விரைந்தனர். ஆனால் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, கல்லூரி வாசலையும், அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…
Read Moreசென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!
Govt to offer 100% stake in 6 airports to private operators in india சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களில் விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை 100 சதவீதம் தனியாருக்கு வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.ஆனால் விமான நிலையங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வருவாய் பங்கீட்டு அடிப்படையில் விமான நிலைய நிர்வாகத்தை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். சென்னை விமான நிலையம் 2,325 கோடி ரூபாய் செலவிலும், கோல்கட்டா விமான நிலையம், 2,015 கோடி ரூபாய் செலவிலும் இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் சென்னை, லக்னோ விமான நிலையங்களை பராமரித்து நிர்வகிப்பதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிடம்…
Read More100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக யாசின் பத்கல் வாக்குமூலம்
100 people trained extremist Yassin patkal இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பத்கல் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பத்கலிடம் காவல்துறையினர் நேற்று 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக நடந்த இந்த விசாரணையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக பத்கல் தெரிவித்துள்ளார். தனது ஆணைக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யும் விதமாக 100 பேரை தீவிரவாத பயிற்சி அளித்து தயார் படுத்தியதாகவும் பத்கல் கூறியுள்ளார். இதற்காக 6 மாதங்கள் நேபாளத்தில் தங்கியிருந்ததாகவும் பத்கல் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தி ஏராளமானோரை கொன்றது குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் பத்கல் கூறியுள்ளார். ஆனால், புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பத்கலும்,…
Read Moreஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு
GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது. உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில்…
Read Moreதீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை
excellent plan and effort involved in yasin arrest இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது. பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர். அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில்…
Read Moreஅரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களே மருத்துவர்கள்
sweepers and nurses are the doctors in government hospital maharashtra இந்தியாவில் சாதனைகள் ஒருபுறம் வளர்ந்தாலும் யாருக்கும் தெரியாமலும் வெளியில் வராமலும் பல அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மகாராஷ்டிராவில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை. மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. sweepers and nurses are the doctors in government hospital maharashtra Government hospitals run by…
Read Moreமாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.
Marriages redefined: Sanitary facilities part of contract மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம் நடக்கும் என்ற நிலையாகிவிட்டது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் ஆவது என்பது பழமொழி. திருமணம் என்பதை கழிவறையை வைத்து நிச்சயம் செய்வது என்பது மத்திய பிரதேச மொழி. மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று போட்டோ எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற…
Read More