இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார் தமிழரான ரகுராம் ராஜன்

Raghuram Rajan takes over as RBI Governor ரகுராம் கோவிந்த் ராஜன் மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய கவர்னர் பதவிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி…

Read More இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார் தமிழரான ரகுராம் ராஜன்

ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை

Indian Government may ban use of Gmail, Yahoo in official communications ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையதள சேவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ-மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு முடக்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ- மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் அனுப்பும் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாகூ இணையத் தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள…

Read More ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை

ஆந்திராவில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

 Acid attack on female college student to withdraw complaint ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணா. இவரது மகள் வாணி. இவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி வாணியை அழைத்தார். வாணியும் ராகவேந்திராவுடன் அவனது அக்காள் வீட்டுக்கு சென்றார். பயண களைப்பு தீர குளிக்க முடிவு செய்தார். அக்காள் வீட்டு குளியல் அறையில் ஆடைகளை களைந்து குளித்தார். அவர் குளிப்பதை ராகவேந்திரா ரகசியமாக தனது காமிராவில் படம் எடுத்தார். பின்னர் அதனை வாணியிடம் காட்டி…

Read More ஆந்திராவில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு

Axis Bank Squash champion Dipika Pallikal sues Axis Bank  பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு தொடர்துள்ளார். சென்னையை சார்ந்த தீபிகா பில்லிகால் உலக தரவ்ரிசையில் 13வது இடத்தில் உள்ள பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையாவார். அர்ஜுனா விருது பெற்ற தீபிகா 2011ம் ஆண்டு ஹாலந்து நாட்டில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஒன்றில் பங்கேற்றார். ரோட்டார்டாமில் தான் தங்கி இருந்த அறைக்கான வாடகை பணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்த தனது ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டை தீபிகா கொடுத்தார். 2 இலட்சம் பணம் அவரது வங்கி கணக்கில் இருந்த போதும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பணம் பட்டுவாடா செய்ய இயலா நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு ஒரு வங்கியின் டெபிட் கார்டு…

Read More பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு

பூனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை லிப்டில் கற்பழிப்பு

Mentally challenged woman raped in Pune hospital பூனாவில்  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பணியாட்கள் இருவர் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனாவின் போசாரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை லிப்டில், மனநலம் பாதிக்கப்பட்ட, பேசமுடியாத பெண் ஒருவர் வார்டு பணியாள‌ர் மற்றும் வாட்ச்மேனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். கடந்த மாதம் 26 ஆம் தேதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மருத்துவமனையின் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியோடு, வார்டு பணியாள் மற்றும் வாட்ச்மேன் லிப்டில் வைத்து கற்பழித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பெண், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி 5 நாட்கள் கழித்து தான், அவரது உறவினர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மருத்துவமனையின் வார்டு…

Read More பூனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை லிப்டில் கற்பழிப்பு

டெல்லி பல்கலைக்கழகம் மாணவிகள் ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடை

Delhi University study trip : No skirts, shorts, spaghetti tops கல்வி சுற்றுலா செல்லும் டெல்லி பல்கலைக்கழக மாணவ-மாணவியர் இந்தந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக இன்று பஞ்சாப் கிளம்புகின்றனர். அவர்கள் ஞானோதயா எக்ஸ்பிரஸ் மூலம் பஞ்சாபுக்கு கிளம்புகிறார்கள். இந்த ரயில் அவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டுள்ளது. முன்னதாக மாணவ-மாணவியர் இந்த சுற்றுலாவின்போது எந்தெந்த உடைகளை அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 900 பேர் ஒரு வார கால சுற்றுலாவாக கிளம்புகிறார்கள். அவர்கள் பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர் ஆகிய இடங்களுக்கும், ஹரியானாவில் குருஷேத்ராவுக்கும் செல்கின்றனர். மாணவிகள் ஸ்கர்ட்டுகள், குட்டைப் பாவாடை, ஷார்ட்ஸ், ஸ்பெகட்டி ஆகியவை அணியவே கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் மற்றும்…

Read More டெல்லி பல்கலைக்கழகம் மாணவிகள் ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடை

உ.பி மாநில ஆசிரமத்தில் 10 பசுக்கள் பலி தீவனத்தில் விஷம்

Gopalgarh : 10 cows die of food poisoning at ashram உ.பி. மாநிலம் மதுரா நகரில் உள்ள கோபால்கர் பகுதியில் ஒரு ஆசிரமத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 பசு மாடுகள் திடீரென இறந்தன. கோபால்கர் பகுதியில் அகந்தானந்த் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று பசு மாடுகளுக்குத் தீவணம் போடப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பிற மாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் 10 மாடுகள் பரிதாபமாக இறந்து போயின. அந்த மாடுகள் உண்ட தீவனம் விஷமாகிவிட்டதன் காரணமாக இந்த பசு மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 24 மாடுகள் உடல் நலம் குன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிற மாடுகளை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த பசுக்கள்…

Read More உ.பி மாநில ஆசிரமத்தில் 10 பசுக்கள் பலி தீவனத்தில் விஷம்

ரஷ்யாவின் சி-17 விமானம் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

C-17 heavy-lift transport plane inducted into IAF  போர் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை சுமந்துச் செல்லக்கூடிய சி-17 ரக விமானத்தை பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி இன்று இந்திய விமானப் படைக்கு அர்ப்பணித்தார். ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.எல்-76 ரக விமானங்களில்தான் இந்திய வீரர்கள் இதுவரை போர்களுக்கு ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்பி வந்தனர்.இந்த விமானம் 40 டன் எடையுள்ள பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டது என்பதால், அதிக எடையை ஏற்றிச் செல்லும் அதிநவீன விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, அமெரிக்காவில் இருந்து 10 சி-17 ரக விமானங்களை வாங்க கடந்த 2011ம் ஆண்டு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 70 டன் (70 ஆயிரம் கிலோ) எடை வரை ஏற்றிக்கொண்டு சவாலான பகுதிகளிலும்…

Read More ரஷ்யாவின் சி-17 விமானம் இந்திய விமானப்படையில் சேர்ப்பு

நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்ற கார் திடீரென தீப்பிடித்தது

car catches fire outside parliament டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று இன்று மதியம் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மதியம் 1.45 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன. கார் தீப்பிடித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னால் சதி எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். car catches fire outside parliament A car parked outside the parliament caught fire. Fire…

Read More நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்ற கார் திடீரென தீப்பிடித்தது

13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!

13 year old senior student at Lucknow University உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி இளநிலை அறிவியல் பட்டம் முடித்து தற்போது முதுநிலை அறிவியல் படிப்பில் சேர லக்னோ பல்கலைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.இப்படி பல்கலையில் இடம் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பகதூரின் கடைசி மகள் சுஷ்மா வயது 13. இந்த சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா தன் இரண்டரை வயதில் லக்னோவில் நடைபெற்ற ராமாயணம் ஒப்புவித்தல்…

Read More 13 வயதில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவி!