இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது

Two war ships to Sri Lanka from India இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இலங்கைக்கு நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்தான் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக்கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கு 2…

Read More

குஜராத் மாநிலத்தில் நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம்

Lion and lioness sit in the middle of road, block traffic குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  இதனால் கிர் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் வனப்பகுதியை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சாலையிலிருந்து வனப்பகுதியில் வனப்பகுதியை பார்த்து ரசித்தனர். அப்போது திடீரென சாலையில் ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் ஜோடியாக வழியை மறித்து அசாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனர். இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி…

Read More

28 வயது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்த 52 வயது மகன்

52-year-old son cremates 28-year-old father சண்டிகரில் கடந்த 45 வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான 28 வயது இந்திய விமான அதிகாரியின் உடலுக்கு, நேற்று அவரது 52 வயது மகன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்தவர் ஹவில்டர் ஜைக்மைல் சிங் என்ற இந்திய விமான அதிகாரி. இவர் கடந்த 1968ம் ஆண்டு,மேற்கு இமாச்சல் அருகே, தெற்கு டாக்கா பனிமலை மேல் ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விமானம் விபத்தில் சிக்கியது. அவர் மரணாமடைந்தது உறுதியான போதும் ஹவில்டரின் சடலம் கிடைக்கவில்லை. மரணமடைந்த போது ஹவில்டருக்கு மணமாகி, 7 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹவில்டரின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இந்திய விமான படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிட்டத்தட்ட…

Read More

இந்தியாவில் தினமும் 4,700 குழந்தைகள் மரணம் அதிர்ச்சி தகவல்

4,700 Indian children under five years die everyday   இந்தியாவில் நாள் தோறும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 4,700 குழந்தைகளுக்கும் மேல் மரணித்து வருவதாகவும், குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டங்களில் இந்தியா மிகவும் பின்தங்கி 136வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. World Vision India என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றும் 1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த ஆய்வில் மேலும், “இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில், 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது. மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி…

Read More

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச்செல்லும் கேரள ஆசிரியர்

A teacher who swims through a river everyday to get to his students கேரளாவில் ஒரு ஆசிரியர் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் பாடம் சொல்லித் தருகிறார். கழுத்தளவு உள்ள தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார் இந்த ஆசிரியர். மாலையிலும் இதேபோல பயணம். அவரது பெயர் அப்துல் மாலிக். 40 வயதாகும் இவர், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். 20 வருடமாக இந்தப் பள்ளிக்கூடத்தில் அவர் பணியாற்றுகிறாராம். ஏன் இந்த நீர்ப் பயணம்.. எதற்காக இப்படி ஒரு பயணம் என்று அவரிடம் கேட்டால், பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுத்தி வரனும். அதற்குள்…

Read More

10 ஆண்டுகளில் குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம்

793 deaths in ashram schools across Maharashtra in 10 years கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. விசாரணையின் போது…

Read More

103 வயது தாத்தாவுக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை

103 year old man gets hip replaced 1910ம் ஆண்டில் சஹீராபாத்தில் பிறந்த மணிக்யம் என்பவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வசித்து வருகின்றார். 103 வயதான இவருக்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உண்டு. மூன்று வாரங்களுக்கு முன்னால், தெருநாய் ஒன்றை விரட்டியபோது கீழே விழுந்த இவருக்கு இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து வலியுடன் செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயது காரணமாக அவருக்கு மயக்க மருந்து கொடுப்பது என்பது கூட சவாலான விஷயமாக இருந்தது. ஆயினும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் டாக்டர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையினை நடத்தி முடித்தது. இந்தத் தகவலை நேற்று மருத்துவமனையில் நடந்த நிருபர்கள்…

Read More

பெங்களூர் சிறையில் இட்லி தோசைக்கு விலை போகும் அதிகாரிகள்

idli dosa as bribe for Police in Bangalore பெங்களூர் சிறையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வார இறுதியில் வெளியே சென்று வரும் செய்தி அம்பலமாகியுள்ளது. கற்பழிப்பு குற்றவாளியான ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகமுள்ள பெங்களூர் அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தப்பியோடினான் . அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறையில் நடக்கும் ரகசியங்கள் குறித்து தெரியவந்துள்ளது. தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் 2012ம் ஆண்டில் 83 நாட்கள் பெங்களூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அவர் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மறுநாள் அதிகாலையில் சிறைக்கு திரும்பிவிடுவாராம். சில நாட்கள் அந்த அரசியல்வாதியை சிறையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வாராம். மறுநாளை காலை சிறைக்கு சென்றுவிடுவாராம். இதற்காக…

Read More

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்-அமரிக்க சோனியாவுக்கு சம்மன்

Sikh rights group filed a complaint against Congress President Sonia Gandhi in US Court. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, 1984ம் ஆண்டு நாடெங்கும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சீக்கியர்களுக்கான நீதி என்ற மனித உரிமை அமைப்பினர் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கலவரத்தை திட்டமிட்ட கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்டோரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார். எனவே இந்த கலவரத்தில் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்பு, மன உளைச்சல், பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியாவிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும்’ எனகூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த நீதிபதி, சோனியாவுக்கு சம்மன் அனுப்பவும், 120 நாட்களுக்குள் அதை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். Sikh rights group filed a complaint against…

Read More

இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார் தமிழரான ரகுராம் ராஜன்

Raghuram Rajan takes over as RBI Governor ரகுராம் கோவிந்த் ராஜன் மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய கவர்னர் பதவிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி…

Read More