10 ஆண்டுகளில் குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம்

793 deaths in ashram schools across Maharashtra in 10 years

793 deaths in ashram schools across Maharashtra in 10 years

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற இறப்புக்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை; ஆசிரம பள்ளிகளில் வாழும் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது; ஒவ்வொரு ஆசிர பள்ளிக்கும் ஒரு மருத்துவ அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்; ஆசிர பள்ளிகளில் காலியாக உள்ள 185 காலி பணியிடங்கள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் சுமார் 1100 குருகுல பள்ளிகள் உள்ளது. இதில் 4.50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றவர். இவர்களில் பெரும்பாலானோர். பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 453 பேரின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 340 குழந்தைகளின் பெற்றோர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துள்ளனர்.

793 deaths in ashram schools across Maharashtra in 10 years

Around 793 children had died in the past decade in ashram schools across Maharashtra, the Bombay high court was informed on Tuesday. A division bench of Justice P V Hardas and Justice P N Deshmukh expressed its dissatisfaction at the measures taken by the government in tackling such deaths. The court said that the lives of the children studying in ashram schools were at great risk. The court has directed the state government to ensure that at least one medical officer was available in the vicinity of every ashram school. The court has also given the state time till September 13 to fill up 185 vacant posts in ashram schools. The petitioner Nashik resident Ravindra Talpe who filed the public interest litigation on the condition of ashram schools was asked by the court to file an affidavit to suggest remedial measures to prevent such deaths. Around 4.50 lakh students, mostly tribal children, are placed in around 1,100 ashram residential schools in the state. The state said that many of the children had died due to snake bites, scorpion bites, fever and minor illness. Over 453 parents were given ex-gratia payment, while 340 parents have yet to be disbursed the ex-gratia amount for the deaths of the children.

Advertisement: Visit www.bestsquarefeet.com for Real estate Requirements in chennai.

Related posts