In Delhi rape case, The sentencing postponed to Friday: The Judge Declared. பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடை பெற்ற டெல்லி மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வெள்ளி அன்று தள்ளி வைத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் வழக்கு நடந்ததாலும் நாட்டின் அமைதியை கருதியும் நீதிபதி வழக்கின் தீர்ப்பை வெள்ளி கிழமை ஒத்திவைத்தார், அபூர்வமான வழக்கு என்பதால் இரு தரப்பு வாதமும் வெகு நேரம் சென்றத்தாலும், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாதிடும் வழக்குரைசர்கள் தங்கள் சார்பு செய்திகளை எடுத்து வைத்தனர். ஒருவர் பேருந்து மட்டுமே ஒட்டியதாகவும் ஒருவர் கற்பழிப்பு மட்டுமே செய்ததாகவும் ஒருவருக்கு குடும்பம் மற்றும் குழைந்தைகளின் நலன் கருதி மரண தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வெகு நேரம் வாதிட்டதால் வழக்கு நீண்ட நேரம் சென்றது. இருப்பினும் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது…
Read More டெல்லி மாணவி கொலை வழக்கில் வெள்ளிகிழமையன்று தீர்ப்புCategory: இந்தியா – சிறகுகள்
கேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று வழக்கமான பூஜைகள் துவக்கம்
In symbolic opening for Kedarnath temple, a 4-hour puja today புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேதி முதல் திருப்பணிகள் தொடங்கின. மலைப்பாதை சீரமைக்கப்படாத காரணத்தால் ஹெலிகாப்டர் மூலமாக 24…
Read More கேதர்நாத் கோவிலில் மீண்டும் இன்று வழக்கமான பூஜைகள் துவக்கம்நிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவு
CBI search results in the Ministry of Coal மத்திய அரசுக்கு நிலக்கரி சுரங்கங்களின் நடந்த முறைகேடான ஒதுக்கீடுகளில் 1.86 லட்சம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டது என கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் நிலக்கரி ஊழல் சம்பதமான முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக மத்திய அரசு தெரிவித்தது. அதனை கண்டுபிடிப்பதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் இன்னும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரத்திற்குள் நிலக்கரி ஊழல் சம்பதமான அவணங்களை சி.பி.ஐ க்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் பல முறை நினைவு படுத்தியும் ஆவணங்களை கொடுக்காததால், சி.பி.ஐ., நிலக்கரித்துறை அமைச்சகத்தில் சோதனை செய்ய திட்டம் வகுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய , இந்த ஆவணங்கள் அவசியம் தேவை என சி.பி.ஐ வட்டாரம் தெரிவிக்கிறது. நிலக்கரி அமைச்சகம், குறிப்பாக 2006 முதல் 2008 ஆண்டு ஆண்டிற்கு உண்டான கோப்புகளை கொடுக்க மறுக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், இந்த காலகட்டத்தில்தான் இந்த அமைச்சகத்தை நடத்தி…
Read More நிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவுஆதார் கார்டு கட்டாயமாக தேவை புதிய சிம் கார்டு பெற
Coming soon, instant mobile ID verification via Aadhaar புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Coming soon,…
Read More ஆதார் கார்டு கட்டாயமாக தேவை புதிய சிம் கார்டு பெறகுடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது இந்திய நகரங்களில்
22 of India’s 32 big cities face water crisis சமீபகாலமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய பெரும் நகரங்களில் அன்றாட குடிநீர் தண்ணீர் தேவை பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது என்று தெரிய வருகிறது.. இந்தியாவில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளில் தண்ணீரும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் தண்ணீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. அரசு அறிக்கையின்படி நாட்டின் முக்கியமான 32 நகரங்களில் 22 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன. கான்பூர், அசன்சோல், தன்பாத், மீரட்,…
Read More குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது இந்திய நகரங்களில்இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்
CAG unearths Rs 17,000 crore scam in railways :ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், அதிகாரம் மிக்க பதவியை பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்ச ரூபாய் , லஞ்சம் பெற்றவழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார்…
Read More இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ரயில்வேயில்உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் கலவரத்தில் 12 பேர் பலி
UP: Situation tense in Muzaffarnagar as death toll climbs to 21, curfew imposed உ.பி. மாநில முஜாபர்நகர் வன்முறைப் பகுதிகளில் ராணுவம் நெற்று கொடி அணிவகுகுப்பு நடத்தியது. இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு 12 பேர் கொல்லப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்துக்கு பிறகு இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். அப்போது புகைப்படக்காரர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இதே போல இந்த மோதலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா…
Read More உத்திரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் கலவரத்தில் 12 பேர் பலிராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்
Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு சென்று நேற்று நாடு திரும்பினார். அவர் சிறப்பு விமானத்தில் அளித்த பேட்டி பின்வருமாறு :வரும் மக்களவை தேர்தலுக்கு பின், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையில் பனியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அரசியலில் நிரந்தர பகைவர்களும் நண்பர்களும் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பு மிக்க உறுப்பினராக…
Read More ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்160 உடல்கள் 4 நாட்களில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கண்டெடுப்பு
Uttarakhand tragedy: Over 160 bodies found in four days உத்தர்காண்ட் மாநிலத்தில் மேலும் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 160 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேரது நிலைமை என்னவென்று தெரியாமலேயே போனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 64 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன. இந்த நிலையில் மேலும் கெளரிகுண்ட் மற்றும் ஹருர்சட்டி பகுதிகளில் இருந்து 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களில் இருந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, டி.என்.ஏ.சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 166 உடல்கள்…
Read More 160 உடல்கள் 4 நாட்களில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கண்டெடுப்பு4 நாட்களில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 32 சிசுக்கள் மரணம்
32 infants die at Kolkata hospital. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், 32 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள பி.சி. ராய் மருத்துவமனை மாநிலத்திலேயே மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஆகும். இங்கு கடந்த 4 நாட்களில் 32 சிசுக்கள் வரை மரணமடைந்துள்ளதான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமா அல்லது நவீன மருத்துவ வசதிகளின் குறைவு காரணமா என்பது பற்றி விசாரிக்க இரண்டு நபர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. ஆனால் குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை மட்டுமே காரணம் அல்ல என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. மற்ற மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்படுகிற மிக மோசமான இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது என்று மருத்துவமனை…
Read More 4 நாட்களில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 32 சிசுக்கள் மரணம்