கல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை

West Bengal minister severely beaten up by public and held hostage ராம்புரத்: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார். அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் மந்திரியை பிடித்து அடித்து உதைத்து, கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்த மந்திரியை மீட்க விரைந்தனர்.  ஆனால் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, கல்லூரி வாசலையும், அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More