International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi அண்மையில் நடந்து முடிந்த 2014-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதி போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றார். இதனால் வீராங்கனை சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்து தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் மூன்று குத்து சண்டை பயிற்சியாளர்களையும் இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The…
Read More பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச குத்து சண்டை சங்கம் விதித்ததுCategory: இந்தியா – சிறகுகள்
அள்ளி வழங்கிய சூரத் தொழிலதிபர் : தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார்
Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர். அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின்…
Read More அள்ளி வழங்கிய சூரத் தொழிலதிபர் : தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார்சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறை
Jayalalithaa Sentenced to Four Years in Jail in Corruption Case by Bangalore Court வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம்…
Read More சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் 4 ஆண்டுகள் சிறைடெல்லி உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது புலி
White Tiger Attacks And Kills Man Who Fell Into Its Enclosure at Delhi Zoo டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு பிளஸ்டூ மாணவர். அப்போது தவறி உள்ளே விழுந்து விட்டார். அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு வெள்ளைப் புலியும் உள்ளது. இந்நிலையில், இன்று ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார். மதியம் சுமார்…
Read More டெல்லி உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது புலிபெங்களூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
350 Bangalore kids fall sick after lizard spotted in mid-day meal பெங்களூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியில் உள்ள உருது ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மதிய உணவுக்காகத் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் காதர் கூறியதாவது: மாணவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.…
Read More பெங்களூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்கர்நாடகாவில் மணல் கடத்தல் லாரி அரசு பேருது மீது மோதி 13 பேர் பலி
13 die as Tirupati-bound bus collides with sand-laden lorry ர்: போலீசார் விரட்டி சென்ற மண் கடத்தல் லாரி, அரசு பேருந்து மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தும்கூர் நகரத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்து பெங்களூர் மார்க்கமாக 50 பயணிகளுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கோலார் அருகே முல்பாகல் மற்றும் நங்கிலி இடையே கம்பலமடகு என்ற இடத்தில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் வேகமாக விரட்டி வந்தனர். இதனால் லாரி மின்னல் வேகத்தில் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போன்று நொறுங்கியது. அதில் பயணம் செய்த 9 பேர்…
Read More கர்நாடகாவில் மணல் கடத்தல் லாரி அரசு பேருது மீது மோதி 13 பேர் பலிசெப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள்
September 5th V. O. Chidambaram pillai Birthday ‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று அழைத்தார்கள் தலைவர்கள். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி…
Read More செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள்இன்று ஆசிரியர் தினம்
Teachers’ Day ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து , குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர்…
Read More இன்று ஆசிரியர் தினம்இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…
Finance Minister Arun Jaitley presented the Finance Ministry’s report card yesterday (Aug-30-2014) for the last 100 days since the NDA govt came to power, as well as the recent initiatives for development taken by the Finance Ministry. பா ஜ க வின் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று மாதங்களின் அதிரடி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர்.திரு.அருண் ஜெட்லி கூறியுள்ளார். தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூன்று மாத நடவடிக்கைகள் பற்றி பத்திரிக்கை நிருபர்களிடம் சனிகிழமையன்று அவர் பேட்டியளித்தார். இதில் சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டின் முன்னேற்றமும், சாதகமான எதிர்காலப்போக்கும் திருப்தி அளிப்பதாகவும் அருண்ஜெட்லி கூறினார். முதல் 100 நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலன் வெகுவிரைவில்…
Read More இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…1000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் மோசடி வங்கி அதிகாரிகள்மிது போலீசார் ஒன்பது எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்துள்ளனர்
FD scam: Mumbai police files nine FIRs நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்திருப்பதாக நாட்டின் சில முக்கிய வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் இது தொடர்பாக 10 எஃப்.ஐ.ஆர்.(FIR)களைப் பதிவு செய்துள்ளனர். நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென் இந்திய கல்வி சங்கம், மும்பை பெருநகர வளர்ச்சித் துறை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் நிரந்தர வைப்பு நிதிகளின் மூலம் கடன்கள் பெறுவதில் இந்த மாபெரும் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது. தேனா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா,…
Read More 1000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் மோசடி வங்கி அதிகாரிகள்மிது போலீசார் ஒன்பது எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்துள்ளனர்