செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள்

September 5th V. O. Chidambaram pillai Birthday

September 5th V. O. Chidambaram pillai Birthday
September 5th V. O. Chidambaram pillai Birthday

‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி.

1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று அழைத்தார்கள் தலைவர்கள். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார்.

சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார். இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ். எஸ். லாவோ” கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும் குறைத்துப்பார்த்தார்.

இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை. தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று எழுதினார்.

பின்னர் அந்த தண்டனை மேல் முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது. கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’ என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார்.

விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு. அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,”இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !” என்று குறிப்பிட்டார். சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார். மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார். அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார்.

பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.

September 5th V. O. Chidambaram pillai Birthday

Born On: September 5, 1872
Born In: Ottapidaram, Tamil Nadu, India
Died On: November 18, 1936
Career: Lawyer, Politician
Nationality: Indian

V. O. Chidambaram Pillai, popularly known by his initials V.O.C, was one of the most prominent lawyers in 19th century British India. While V. O. Chidambaram Pillai provided a strong leadership to trade unions functioning in his native state Tamil Nadu and also fought for India’s freedom from the British, he is best remembered as the man who set up the first indigenous shipping service between Tuticorin and Colombo. Owing to V. O. Chidambaram Pillai’s rebellious attitude and his courage to act against the British government, the English stripped the title of barrister associated with his name. It was his brave nature that won V.O.C the name ‘Kappalottiya Tamilian’ in Tamil Nadu, which translates to ‘The Tamil Helmsman’ in English.

Childhood and Legal Career
V. O. Chidambaram Pillai was born on September 5, 1872 in the town of Ottapidaram in Tuticorin district of Tamil Nadu. His father Olaganathan Pillai was one of the most important lawyers of the country and it was in his father’s footsteps that V.O.C followed after completion of his education. V. O. Chidambaram Pillai enrolled in schools in his native Ottapidaram and nearby Tirunelveli. V.O.C started working in the Ottapidaram district administrative office after the end of his school education. It was only a few years later that he enrolled in law school and completed law studies to become a lawyer like his father Olaganathan Pillai.

Though his father was his biggest inspiration in the profession of law, there was a basic difference in the working styles of V. O. Chidambaram Pillai and Olaganathan Pillai. While his father catered to the problems of only the affluent in the society, V.O.C was sympathetic towards the poor people whose cases he sometimes took up against the wishes of his influential father. A case in which V O Chidambaram Pillai proved that three sub-magistrates in Tamil Nadu were guilty of corruption charges won him attention and fame as a lawyer.

Career in Politics
V. O. Chidambaram Pillai entered into active politics in the year 1905 by becoming a member of the Indian National Congress. The Swadeshi movement in India was already at its hilt during this time and leaders like Lala Lajpat Rai and Bal Gangadhar Tilak were trying their best to put an end to British Imperial coercion of trade. The same cause which would also ensure the safety of traditional Indian industries and communities dependent on them was being championed by Aurobindo Ghosh, Subramanya Siva and Subramanya Bharathi through the Madras Presidency. V.O.C then decided to join the Indian National Congress and fight along with other members of the Madras Presidency. He later presided over the Salem District session of the INC.

Shipping Company
After joining the Indian National Congress, V. O. Chidambaram Pillai wholeheartedly immersed himself into Swadeshi work to secure independence for India. Part of his Swadeshi work was to put an end to the monopoly of British shipping in the coasts of Ceylon. Inspired by freedom fighter Ramakrishnananda, he set up the Swadeshi Steam Navigation Company on November 12, 1906. With the help of other Swadeshi members Aurobindo Ghosh and Bal Gangadhar Tilak, V.O.C bought two steamships S. S. Gaelia and S. S. Lawoe to start his shipping company. Much to the annoyance of the British government and British traders, V.O.C’s ships started regular services between Tuticorin and Colombo. His shipping company was not only a commercial venture, it was also the first comprehensive shipping service set up by an Indian in British India. The Swadeshi Steam Navigation Company gave stiff competition to the British India Steam Navigation Company, due to which the latter had to reduce fares per trip. While V.O.C responded by reducing his rates even further than that of the British India Steam Navigation Company, he could not afford their tactics of offering free rides and umbrellas to passengers, thus taking the Swadeshi Steam Navigation Company on the verge of bankruptcy.

Nationalistic Spirit
V. O. Chidambaram Pillai aimed at expanding the reach of Swadeshi in the country and making the common Indian man aware of the faulty British government. It is for this purpose that V.O.C took the support of workers of Coral Mills in Tirunelveli. The British authorities had already taken a disliking towards Pillai and this act compelled them to arrest V.O.C on March 12, 1908 on charges of sedition against the government. Violence erupted in the state after the arrest of V.O.C. Clashes between police and common men followed, leading to the death of four people. Though his actions were vehemently condemned by British authorities, V.O.C got the support of the press in the country which praised his nationalistic spirit elaborately. While the British were trying their best to prosecute V.O.C, Indians in the country as well as in South Africans were accumulating funds to free him from prison. Mahatma Gandhi, then staying in South Africa, also had collected money and sent it to India to fund the defense of V O C. After his arrest, Pillai was housed at the Central Prison in Coimbatore from July 9, 1908 to December 1, 1910. The British had slapped a sentence of life imprisonment on V.O.C, clearly indicating that they were afraid of his rebellious spirit.

During his days in prison, V O Chidambaram Pillai did not receive the treatment shown to other political prisoners; rather he was made to engage in hard labor in prison just like other convicts. The hard work took a toll on his health and the gradual deterioration of his condition forced the British authorities to release him from prison on December 12, 1912. While in prison, V O Chidambaram Pillai continued with his Swadeshi activities through legal petitions. Cruel circumstances struck him when V O Chidambaram Pillai was released from prison. Instead of a large gathering of supporters which he had expected in front of the jail gates, there was an eerie silence. The title of barrister was taken away from him, meaning that V.O.C could not practice law anymore. The Swadeshi Steam Navigation Company was also liquidated in the year 1911, so V.O.C was left a poor man. V O Chidambaram Pillai settled in Madras with his wife and two children and became the leader of various trade unions and labor welfare organizations in Madras. In the year 1920, V O Chidambaram Pillai presided over the Calcutta session of the Indian National Congress.

Literary Works
Apart from his works as an eminent lawyer and a politician, V O Chidambaram Pillai was also a scholar. He started his autobiography while in prison and completed it soon after his release in the year 1912. V O Chidambaram Pillai was the author of a couple of novels; he translated several James Allen works in Tamil and made compilations of important Tamil works like the Thirukural and the Tolkappiam.

Personal Life
V O Chidambaram Pillai married Valliammai in the year 1895, but she died prematurely in the year 1901. He married Meenakshi Ammiar a few years later. The couple had four sons and four daughters. His eldest son died when still a child, the second son was a politician, the third son was the employee of the American Embassy in Madras and the fourth son, still alive is settled in Madurai. All his daughters had been married in Madras. The descendants of V.O.C Pillai still live in various places across Tamil Nadu.

Death
V O Chidambaram Pillai spent such an impoverished lifestyle after he was released from prison that Justice Wallace who sentenced V O C to prison restored his bar license. But V O C was never successful in repaying his debts and lived in poverty till the end of his life on November 18, 1936. V O Chidambaram Pillai breathed his last at the Indian National Congress office in Tuticorin.

Commemorations
Vallinayagam Olaganathan Chidambaram Pillai is remembered as one of the most important figures in India’s struggle for independence. He is much loved and celebrated in the Tamil Nadu society till today.
He was given the title of ‘Kappalottiya Tamilan’, or the Tamil Helmsman; or one who drives the ship and shows the direction.
The Tuticorin port was renamed as V.O.C Port after independence in fond remembrance of V.O.C.
V.O.C has a college in Tuticorin named after him.
A special postage stamp was released by the Indian Posts & Telegraphs department to mark the birth centenary of Vallinayagam Olaganathan Chidambaram Pillai on September 5, 1972.
V.O.C Park and V.O.C Grounds are the most important public park and meeting ground in Coimbatore.
The Central Prison in Coimbatore where the revolutionary was housed has a monument constructed inside the prison premises dedicated to him.
The connecting bridge between Tirunelveli and Palayamkottai has been named the V.O.C Bridge.
The 1961 Tamil movie ‘Kappal’ottiya Thamizlan’ is based on the life story of Vallinayagam Olaganathan Chidambaram Pillai. It stars Sivaji Ganesan in the lead role.
Timeline
1872: Vallinayagam Olaganathan Chidambaram Pillai was born on September 5.
1895: Married Valliammai.
1901: His wife died of illness.
1905: Joined politics by becoming a member of the Indian National Congress.
1906: Started his shipping company Swadeshi Steam Navigation Company on November 12.
1908: Was arrested on charges of sedition on March 12.
1908: Sent to the Central Prison in Coimbatore on July 9.
1911: His shipping company Swadeshi Steam Navigation Company is liquidated.
1912: Released from prison on December 12.
1920: Presided over the Calcutta session of INC.
1936: Died on November 18.

Related posts