தமிழக சிறைகளில் இருந்து ஒரே நாளில் 3000 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons.

A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons.
A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, தமிழக சிறைகளில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் சுமார் 3 ஆயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய சிறைகளில் உள்ள 4 லட்சம் சிறைக் கைதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நீண்ட கால விசாரணையின் காரணமாக பல ஆண்டுகள் தண்டணை வழங்கப்படாமலேயே விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கிடைக்கும் தண்டனையில் பாதி காலத்தை, அவரது தண்டனை நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே கழித்துவிட்டால், அவரை விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தண்டனைக் காலத்தில் பாதி நாள்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், நாடு முழுவதும் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை விடுதலை செய்ய அந்தந்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சிறைகளில் “மக்கள் நீதிமன்றம்’ (லோக் அதாலத்) மூலம் சிறு வழக்குகள் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு ஏற்பாடு செய்திருந்தது. கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய கைதிகளை தவிர, 3 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்பட்ட கைதிகளிடம் நீதிபதிகள் நேரடி விசாரணை நடத்தி வழக்குகளுக்கு உடனடித் தீர்வு கண்டனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதிகளுக்கு உடனடி அபராதம் விதித்தும் அல்லது தண்டனை காலத்தை விட நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தால் விடுதலை செய்தும் உத்தரவிட்டனர். தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட மத்திய சிறைகளிலும், கிளை சிறைகளிலும் இந்த மக்கள் நீதிமன்ற விசாரணை நடந்தது. இதுபோல் கோவை, மதுரை, கடலூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் கிளை சிறைகளிலும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில் தண்டனை காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்த கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 3 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons.

Related posts