350 Bangalore kids fall sick after lizard spotted in mid-day meal
பெங்களூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியில் உள்ள உருது ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மதிய உணவுக்காகத் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் காதர் கூறியதாவது:
மாணவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே, மாணவர்களுக்கு சுகாதாரமற்ற மதிய உணவு அளித்த பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, பெற்றோர்கள் கோஷமிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து டி.ஜி.ஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
350 Bangalore kids fall sick after lizard spotted in mid-day meal
Nearly 350 students of a government school in Bangalore were admitted to a hospital on Friday due to food poisoning after having their mid-day meals. The children of the DJ Halli Urdu Government School complained of nausea and vomiting soon after they had their lunch allegedly supplied by Iskcon, acronym for International Society for Promotion of Krishna Consciousness. Zameer Ahmed, a teacher at the school said, “We got the food from Iskcon centre. We began serving students from Class I to VII. Then one of our teachers saw a lizard in the box. There was panic and we rushed to the hospital.” “We do plan to question the authorities on how they can serve food like this,” he said. Iskcon, however, has denied that the food was provided by them. “We would like to bring to your notice that the reported news is incorrect and defamatory as Iskcon Food Relief Foundation has no kitchen in Bangalore and therefore does not serve food in Bangalore,” a statement issued by a senior executive at Iskcon said. The Iskcon official said in his statement that it is another NGO, Akshaya Patra, which is operational in the area. Dr Shivakumar of the Ambedkar Hospital said, “About 350 students came in here. They complained of abdominal pain and vomiting. We gave them the treatment. Now around 70 are still here of which 20 are under observation.” Dr Shivakumar said the sample of the food has been sent to the forensic lab. The report is awaited. Senior police officials said they are investigating the incident. Additional Commissioner of Police (Law and Order) Alok Kumar said, “The condition of the children is stable. After spotting the lizard, the children began to complain of abdominal pain and vomiting.”