இந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…

Read More இந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு  அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த  கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த  அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக…

Read More காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தெலுங்கானாவில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனை தலையை சுவற்றில் முட்டி ஆசிரியை தண்டனை : 6 வயது மாணவன் சாவு..

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district. six year old boy smashed in a wall for not speaking english தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நல்கொண்டா மாவட்டம் திருமலைகிரி கிராமத்தை சார்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலம் பேச தெரியாததால் 6 வயது மாணவனை சுவற்றில் தலையை வைத்து இடித்து ஆசிரியை முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓர் விவசாயினுடைய மகனான சந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமதி சிறுவனை அடித்ததுடன் அவரது தலையை சுவற்றில் மோதியுள்ளார். சுவரில் நீட்டிக் கொண்டிருந்த…

Read More தெலுங்கானாவில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனை தலையை சுவற்றில் முட்டி ஆசிரியை தண்டனை : 6 வயது மாணவன் சாவு..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்

Chhattisgarh: Sterilisation surgery leaves 8 women dead, 55 still ‘in trouble’ சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் புறநகரில் பென்தாரி கிராமத்தில் நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அந்தப் பெண்கள் மருந்துகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களில் 29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சனை காரணமாக பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read More சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்

2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…

Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…

Read More 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..

No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…

Read More சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..

ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம் சூரத் விமான நிலையத்தில் பரபரப்பு

spicejet rams over a buffalo at surat airport குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் எருமை மாட்டின் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து நேற்றிரவு 7.20 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 622 ரக விமானம் டெல்லி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. ஓடுதளத்தில் அந்த விமானம் பயணிக்க தொடங்கியபோது திடீரென எருமை மாடு என்று குறுக்கே வந்தது. அந்த மாடு விமானத்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த சம்பவத்தால் விமானத்தின் பக்கவாட்டு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக விமானத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தி, பார்க்கிங் பகுதிக்கு விமானத்தை கொண்டு சென்று நிறுத்தினார். இச்சம்பவத்தால் விமானத்தில்…

Read More ஓடுபாதையில் எருமை மீது மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம் சூரத் விமான நிலையத்தில் பரபரப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

ஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு

DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும்…

Read More ஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு

பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த எட்டு வயது தலித் சிறுவனை தடியால் தாக்கிய பூசாரி

He allegedly assaulted a seven-year-old Dalit boy at a temple in Nelamangala பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவர்களை அங்கிருந்த பூசாரி அடித்து உதைத் துள்ளார். ஒரு சிறுவனை தடியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வர்கள் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க‌ சென்றபோது போலீ ஸார் துணையுடன் ஆதிக்க சாதியினர் கட்டப்பஞ்சாயத்து செய் துள்ளனர். பெங்களூரை அடுத்து நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் ராஜ்குமார். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவருடைய மகன் சந்தோஷ் (7). அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 19-ம் தேதி ருத்ரேஸ்வரா கோயில் பூசாரியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் சந்தோஷை சந்தித்துப் பேசிய போது அவன் கூறியதாவது: நானும் எனது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு அருகில் உள்ள ருத்ரேஸ்வரா…

Read More பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த எட்டு வயது தலித் சிறுவனை தடியால் தாக்கிய பூசாரி