சேரனின் மகள் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நீதிமன்றம் உத்தரவு

Tamil Cinema director cheran daughter news இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியர் பாதுகாப்பில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரன் மகள் தாமினி காதல் பிரச்சனையால் வீட்டிலிருந்து வெளியேறி தன் காதலன் சந்துருவுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் தான் சந்துரு என்ற இளைஞரை காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் சந்துரு நல்லவர் இல்லை என்றும் தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என இந்த குற்றச்சாட்டினை சேரன் மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் தங்க வைத்தனர். இந்நிலையில்…

Read More

கர்நாடக அரசியலில் குத்து ரம்யா என்கின்ற திவ்ய ஸ்பந்தனா

kuthu ramya entering karnataka politics நடிகர் நடிகைகள் அரசியல் நுழைவு இந்தியவில் தொடர்ந்து வரும் வரலாறு ஆகும் இந்த வரிசையில் இணையும் அடுத்த பிரபலம் நடிகை திவ்ய ஸ்பந்தனா என்கின்ற குத்து ரம்யா. கர்நாடகத்தின் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகை திவ்ய ஸ்பந்தனா போட்டியிட உள்ளார். பிரபல கன்னட நடிகையான திவ்ய ஸ்பந்தனா, இவர் கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியாவர்.இந்நிலையில் இவர் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த குமாரசாமியும், மாண்டியா எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நடிகை ரம்யா பெயரை முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ்…

Read More

நான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி

Actress Kanaka Is Alive தான் புற்று நோயால் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி என நடிகை கனகா பேட்டி அளித்துள்ளார். முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, இவர் நடித்த கரகாட்டக் காரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதையடுத்து ரஜினி, பிரபு, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த அவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக மாறியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாது இருந்த அவர் 200ம் ஆண்டில் தனது தனது தாய் இறந்த பின்பு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவின் ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. சமீபத்தில் மலையாள திரையுலகத்தின் பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில்…

Read More

கவிஞர் வாலி மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

tamil poet vaali dead வெள்ளிக்கிழமை, ஜூலை 19,2013:  கவிஞர் வாலி உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.  கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தள்ளனர். இது குறித்து இவர்கள் தெரிவித்துள்ள இரங்கலில், தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப் பதித்தவரான இவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர். கவிஞர் வாலியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.…

Read More

கவியரசன் கண்ணதாசன் 87வது பிறந்தநாள்

Tamil poet kannadasan birthday இன்று உலக தமிழர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த வித்தக கவிஞன் கவியரசன் கண்ணதாசன் அவர்களின் 87வது பிறந்தநாள்  கண்ணதாசன் ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருதுபெற்றவர். தமிழ் வார்த்தைகளால் சொற்களை கவிதை நயத்தில் கையாண்டு கவிதையாய் கொடுத்து தமிழ் மக்கள் மனதில் இன்றும் கடவுளாய் உலா வருபவர் கவிஅரசன் கண்ணதாசன், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு தனித் தனியே வரிகள் அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இருவரும் தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க கண்ணதாசனும்…

Read More

60 நாட்கள் தூங்காமல் இருந்த மைக்கல் ஜாக்சன்

மறைந்த உலகப்பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஹார்டுவர்ட் மெடிகல் ஸ்கூல் ஸ்லீப் எக்ஸ்பெர்ட் (Harvard Medical School sleep expert, Charles Czeisler) என்பவர் தனது அறிக்கையில், மைகேல் ஜாக்சன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கேல் ஜாக்சனாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த Dr. Murray அறியவில்லை என்றும், இதற்காக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் மைக்கேல் ஜாக்சனின் தாயார் தெரிவித்துள்ளார். Michael…

Read More

கவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி  வியாழன் அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். கவிஞர் வாலி அவர்கள் வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டும்மல்லாமல், இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். 50ஆண்டுகள் கடந்து இன்றும் திரையுலகில் பாடல் எழுதுபவர் என்பதினால் வாலிப கவிஞர் வாலி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர். எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். திரையுலகில் அனைவருக்கும் இனியவராக திகழ்பவர் வாலி. காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று…

Read More

தமிழ்நாடு இயக்குனர் சங்க தேர்தல் : இயக்குனர் விக்ரமன் வெற்றி

Tamilnadu Directors Association election, Director vikraman elected as the President of Directors Association 716 வாக்குகள் பெற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின்    தலைவர் பதவிக்கு இயக்குனர் “விசுவும்”, இயக்குனர் “விக்ரமனும்” போட்டியிட்டனர். பொதுச் செயலர் பதவிக்கு ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணியும், துணைத் தலைவர் பதவிக்கு பி.வாசு,கே.எஸ்.ரவிக்குமார், மங்கை அரிராஜன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்குசேகர், ஜெகதீஷ் ஆகியோரும், இணைச் செயலர் பதவிக்கு லிங்குசாமி,பேரரசு,சண்முக சுந்தரம், செய்யாறு ரவி, ஏகம்பவாணன், ஜெயப்பிரகாஷ், கண்ணன், பிரபாகர் ஆகியோரும்போட்டியிட்டனர். இரு அணிகள் சார்பிலும் செயற் குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர்.இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று வாக்குப்பதிவு…

Read More

பில்கேட்ஸ் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம்.

bill gates willing to meet actor amir khan உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பில்கேட்ஸ், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் பில்கேட்ஸ் தன்னுடைய இணையத்தில் கூறியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமீர்கான் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக…

Read More

சொந்த படம் தயாரிப்பில் இறங்கும் சினேகா

பிரபல நடிகை சினேகா தென்னிந்திய திரை உலகில் தனெக்கென்று ரசிகர்களையும் தனி இடத்தையும் வைத்துள்ளவர் புன்னகை அரசி என்று அழைக்கப் படும் சினேகா சினிமா உலகில் தனது அனுபவத்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று பலரால் எதிர் பார்க்கப் பட்டது ஆனால்  அவர் மிகவும் தெளிவான முடிவில் இருக்கின்றார் அவர் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளார் சமிபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதை தொடர்ந்து அவரும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருக்கின்றார் இப்படத்தில் நடிப்பதற்காக தனது நெருக்கமான நடிகர் நடிகைகளிடம் அவர் பேசிக்கொண்டு இருகின்றார் இப்படத்தி இவரும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது . தற்பொழுது பிரகாஷ் ராஜுடன் உன் சமையல் அறையில் படத்தில் நடித்துவரும் சினேகா அவரிடம் இருந்தே சின்ன பட்ஜெட் படம் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு…

Read More