ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாக சம்பந்தப்பட்ட சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த வகை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தான்ஸானியா நாட்டை சேர்ந்த 9 மாதமே ஆன எரிகா மற்றும் எல்யூடி என்ற இடுப்புக்கு கீழே ஒட்டிப் பிறந்த ஆண் குழந்தைகள் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.…

Read More

மனநலம் குன்றிய 18 வயது மகனை கருணை கொலை செய்யக்கொரி பெற்ற தாயே மனு அளித்த அவலம்

A mother of 18 years old mentally affected so given petition to the police for mercy killing மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கருணை கொலை செய்யக்கோரி பெற்ற தாயே மனு கொடுத்துள்ள வேதனை தரும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 40). இவரது மகன் ரோகித்(18). கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை பாக்கியலட்சுமி ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள்,…

Read More

சென்னையில் இந்த ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு

Three-fold Jump in Drink-driving Cases அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் வெறும் 16,881 பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். ஆனால் இந்தாண்டு இந்த எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.அதாவது இந்தாண்டு நவம்பர் மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57,962 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாதனை(!) படைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல்…

Read More

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 திருடர்கள் காவல் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிஒட்டம்

Koyambedu bus stand : Two thieves clashed with a lone policemen in Chennai, Koyambedu bus stand when he attempted to nab them. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களை ஒரு போலீஸ்காரர் பிடிக்க முயன்றார். அப்போது திருடர்கள் இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் விடாமல் தனி நபராக போராடினார் அந்த போலீஸ்காரர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள், பயணிகள் வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவர் கூட போலீஸ்காரருக்கு உதவ முன்வரவில்லை. சென்னையில் திருடர்கள் அட்டகாசம் பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்று திருடர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட மடிப்பாக்கம் பகுதியில் ஒரு திருடனை போலீஸார் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவன் தப்பி விட்டான். அவனைப்…

Read More

பேஸ்புக் கில் உலா வரும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு

ஆதிமுக தலைவரும் செயலாளரும்மான முதல்வர் ஜெயலலித்தா அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்யும்  பொழுது “திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர்” எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என கேள்வி எழுப்புவார், அது உண்மையை நிருபிக்கும் விதமாய் சில நாட்களாக facebook இனைய தளத்தில் பலரின் கருத்து தொகுப்பில் திமுக தலைவர் மற்றும் திமுகா வின் சொத்து மதிப்பை பகிர்கின்றனர் அந்த பகிர்வு இங்கு கீழே தரப்பட்டுள்ளது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. நெஞ்சம் பலகீனமானவர்கள் இதனை பார்க்க வேண்டாம்.…

Read More

ரிப்பன் பில்டிங் கட்டிடம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு

Ripon building 100th anniversary  சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கம்பீரமான மாளிகை கடந்த 1909ம் ஆண்டு கட்ட துவங்கி 1913ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த மாளிகையின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுரடி. மாளிகை 252 அடி நீளமும் 126 அடி அகலமும் மாளிகைக்கு அழகு சேர்க்கும் கடிகார கோபுரம் 132 அடி உயரமும் கொண்டவை. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், 8 அடி விட்டம் உடையது.இந்திய – ரோமானிய கட்டட கலை வடிவமைப்பு கொண்ட ரிப்பன் மாளிகையில் வெப்பத்தை உள் வாங்காத வகையிலான மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கல், சுண்ணாம்பு, மணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் கலந்த கலவையில்…

Read More

நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?

சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:– காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து…

Read More

வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம். ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம். செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும்…

Read More

சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.

Green organics chennai stores and Agro Food products exporters கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம் Green organics chennai stores and Agro Food products exporters சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??. வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது. ரசாயன கலப்பில்லாத உணவு : ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ்,…

Read More

சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்

railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று காலை 11.30…

Read More