காமராஜரை பற்றி தவறாக பேசியதாக நடிகர் கர்ணாஸ் வீடு முற்றுகை

Actor karnas condemed for speaking rubbish about past chief minster Kamaraj in a school function held in pallipalayam located in coimbatore district. சென்னை: பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய நடிகர் கர்ணாஸ் மன்னிப்பு கேட்க கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் சனியன்று அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். லொடுக்கு பாண்டி என்ற நகைச் சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவர் நடிகர் கர்ணாஸ். இவரது இல்லம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 5வது தெரு டபுள்யூ பிளாக்கில் உள்ளது. இங்கு இவர் கிரேஸ் என்ற மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சனி காலை அவரது வீட்டின்முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் தலைமையில் 50க்கும் அதிகமான கட்சியினர் திரண்டனர்.…

Read More

செப்டம்பர் 21 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உலக அமைதி தினம்

International Day of Peace Observed on 21 September உலக அமைதி நாள்  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக…

Read More

மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை

Techie kills wife, jumps to death from 13th floor பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன். சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார். பின்னர் தான்…

Read More

தூத்துக்குடியில் பதுக்கிய தாது மணலை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி

tuticorin harbour to be protested by three district fisher men to stop smuggling of soil containing rare minerals from tamilnadu. தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இருந்து தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிகையை முன்வைத்து தூத்துக்குடி துறைமுகத்தை முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடிரென முற்றுகையிட வேண்டும் என மூன்று மாவட்டதை சார்ந்த மீனவர்கள் தீர்மானித்துதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு  மற்றும் தூத்துக்குடி மீனவர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக அதனுடைய நிர்வாகிகள் சுபாஷ் பர்னாண்டோ, சேவியர்வாஸ், ஜாய்காஸ்ட்ரோ, ஸ்டீபன் ஆகியோர் சில தகவல்களை அளித்துள்ளனர். அவர்கள் கூறியது பின்வருமாறு: தமிழக அரசு தாது மணல் மீது விதிக்க பட்டிருந்த போதிலும், சிறப்பு அனுமதியுடன் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக  என்னும்…

Read More

பிரதமராக சோனியாவை ஏற்று கொள்ளவே முடியாது: சுஷ்மா சுவராஜ்

Sonia gandhi cannot be accepted as Indian prime minister : Sushma swaraj புதுடில்லி : இத்தாலி நாட்டில் பிறந்து வளர்த்தவர் சோனியா.  அவரை  பிரதமராக எப்போதும் ஏற்ற்று கொள்ளவே முடியாது என பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்த கொண்ட அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், சோனியா காங்கிரஸ் கட்சி தலைவராக  இருக்கட்டும், ஆனால் அதற்காக அவரை பிரதமராக கண்டிப்பாக ஏற்க முடியாது; இப்படி ஒரு வெளிநாட்டுகாரர் இந்திய பிரதமராக தேர்வு செய்தால் அது பாரம்பரியம் மிக்க இந்தியாவையும், இந்தியர்களை அவமான படுத்தும் செயலாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நமது முன்னோர்கள் பலர் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். இப்படி, உயிர் தியாகம் செய்து வெள்ளையரிடம் இருந்து பெற்ற சுதந்திரம் 60 ஆண்டுகளுக்கு பின்,…

Read More

அமெரிக்க நிர்பந்தம்!! பணிந்ததா மன்மோகன் சிங் அரசு??

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Indian Prime minister Man mohan singh may carry nuclear liability dilution  to U.S.Nuclear power companies அணு உலை விபத்து இழப்பீடு விஷயத்தில் அமெரிக்க நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு பணிந்து, நமது நாடாளுமன்றத்தில் இயற்றபெற்ற சட்டப்படி நடவாமல் அவமதித்தது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கும் எதிரான செயல் என   எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவிருக்கிறார். அந்த சந்திப்பின் போது இந்தியாவில் அணு மின் உற்பத்திக்காக  அணு உலைகள் நிறுவும் விவகாரத்தில், நாட்டினுடைய நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அமெரிக்க நிறுவங்களுக்கு ஆதரவாகவும் ஒபந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட உத்தேசித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அணுஉலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இந்தியாவில் அணு…

Read More

பார்வையற்ற தனது ரசிகையின் கனவை நனவாக்கிய நடிகர் ஷாருக்கான்

When Shah Rukh Khan made a blind fan’s wish come true சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது. கரோலினுக்கு ஒரு கனவாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்து கரோலின் கூறுகையில், திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.பின்னர் என்னை கட்டிப்…

Read More

பிரான்சில் மலையிலிருந்து குதிக்கும் சாதனையில் ஈடுபட்ட அமெரிக்கர் பலி

American wingsuit flyer dies in French Alps   பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு அமெரிக்கர் பலி. 33 வயது நபர் அமெரிக்கர் ஒருவர் 2,500 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சாதனைக்கான பயிற்சியின் போது இவர் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். அந்த அமெரிக்கரின் பெயர், ஏனைய விபரங்கள் மற்றும் விபத்து குறித்து தகவல்கள் அறிய  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பயிற்சி அதிகாரிகள் கூறுகையில்; இந்த மலை பகுதி மிகவும் ஆபத்து நிறைந்தது எனவும் இந்த பகுதியை பற்றி முழுமையாக அறியாமலும், இந்த மலையில் ஏறுவதற்கு உண்டான பயிற்சி இல்லாமலும் சென்றால் விபத்து நிகழ்வு நிச்சயம் என குறிப்பிட்டுள்ளனர். இதுவரை ஆல்ப்ஸ் மலையில் சாதனையில் ஈடுபட்டு பலியானோர் எண்ணிகை  6 ஆகும். கடந்த…

Read More

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்து அமெரிக்கர் சாதனை

25 inches high, 4 feet long: Here’s the world’s smallest roadworthy car அமெரிக்கர் ஒருவர், உலகிலேயே மிகவும் சிறிய கார் ஒன்றை வடிவமைத்து, தயாரித்து, அதை சாலையில் ஓட்டி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது தயாரிப்பை இடம் பெறச் செய்துள்ளார். இவரது பெயர் திரு ஆஸ்டின் கால்சன், இவர் கார் வடிவமைக்கும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பல வித்தியாசமான கார்களை வடிவமைத்துள்ள திரு ஆஸ்டின் கால்சன்,  தான் எதாவது புதுமை படைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய மிக சிறிய கார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மிகச் சிறிய காரை சாலையில் ஓட்டுவதற்கு சில அத்தியாவசிய அம்சங்கள் தேவைப்பட்டன. அதன் அடிபடையில், ஒலிப்பான், பாதுகாப்பு கண்ணாடி, மற்றும் சீட் பெல்ட் போன்ற பொருட்கள் சேர்த்து…

Read More

கிணற்றில் விழுந்த 38 வயது பெண் 15 நாட்களுக்கு பின் மீட்பு

Chinese woman survives 15 days in well சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (வயது 38). இவர் கடந்த 1-ம் தேதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று, மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ…

Read More