ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…
Read More மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…Category: செய்தி சிறகுகள்
நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து
Fire accident at Mumbai multistorey building மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ…
Read More நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்துபாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்பு
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள் நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து அறுவை சிகிச்சை இல்லாமல் சூப்பர் பேஸ்மேக்கர் இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை
Read More பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்புஇந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை
National Green Tribunal bans burning of plastic, rubber across the country இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத முறையில் திறந்தவெளியில் ரப்பர்பொருட்களின் கழிவுகளை எரிக்க நேற்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தடை முறைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்து மறு சீரமைப்பு சூழலில் இயற்கையின் பாதுகாப்பிற்குத்தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு விதிகளுக்கு உட்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பி.வி.சி / பாலிஸ்டர்/ பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் என என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறியுள்ளார்.…
Read More இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடைபெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றி
India won Womens Kabaddi World Cup 2013 உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது.இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ…
Read More பெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றிஅமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள். அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான…
Read More அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்
Chinese boy kept in cage for 40 years மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின்…
Read More சீனாவில் மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகளக கூண்டில் அடைத்து வைத்து வளர்த்த தாய்செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்
Over 20,000 Indians apply for one-way trip to Mars செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார்…
Read More செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்ஐஃபொன், ஸ்மார்ட்ஃபொன் மூலம் அல்ட்ரா சவுண்ட் அமெரிக்க மருத்துவகல்லூரி மாணவர்கள் சாதனை
Ultrasound now possible in your smart phone. மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை…
Read More ஐஃபொன், ஸ்மார்ட்ஃபொன் மூலம் அல்ட்ரா சவுண்ட் அமெரிக்க மருத்துவகல்லூரி மாணவர்கள் சாதனைடிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்
Today Bharathiyar’s Birthday (11 December) தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. இன்று 132-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுப்பிரமணிய…
Read More டிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்