Case regarding legalization of Mercy Killing in Supreme Court நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குணப்படுத்தவே முடியாத நோயால் துண்புருவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் கூறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், “காமன் காஸ்” தொண்டு நிறுவனம் ஒன்று, மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள நோயாளிகளை அவர்கள் விருப்பினால், கருணைக் கொலை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு கொடுத்துள்ளது. இந்த மனு, அரசியல் சாசன அமர்விலுள்ள ஆர்.எம்.லோதா, ஏ.கே.சிக்ரி, சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் முன்பு வந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாரர் சார்பில் ஆஜரானார். அவர், “உச்ச நீதிமன்றத்தில் முன்பே இந்த…
Read More நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுCategory: செய்தி சிறகுகள்
செங்கோட்டை அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஐந்து பேர் பலி
5 killed 7 injured bus car collision திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி – கொட்டாகுளம் திருப்பத்தில் அரசுப் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த பழனி, பச்சையப்பன், செல்வம், சவுகத் அலி, செல்வராஜ், ராஜ்குமார், பன்னீர் செல்வம் ஆகிய 7 பேர், குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு, நேற்று இரவு செங்கோட்டை- பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் உணவுண்டனர். பின்னர் இரவு 11 மணி அளவில் தங்கள் ஊருக்கு காரில் திரும்பினர். பார்டரில் இருந்து சிறிது தொலைவில், அவர்கள் சென்ற கார், செங்கோட்டை-திருமங்கலம் சாலையில் கொட்டாகுளம் கிராமத்தில்…
Read More செங்கோட்டை அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதி விபத்து ஐந்து பேர் பலிபெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை
Police advised Girls to use Chili Powder as a prevention tool பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரை. ”மதுரையில், பெண்கள் நகைபறிப்பு திருடர்களிடமிருந்து தப்பிக்க, எப்போதும் மிளகாய்பொடி கைவசம் வைத்திருக்க வேண்டும்” என்று குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை கூறியுள்ளார். மல்லிகை குடியிருப்பில், கே.கே.நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் ஏற்படும்நகை பறிப்பு மற்றும் வீடுகளில் திருட்டை நடக்காமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலைவாணி மாதர் சங்கம் மற்றும் ஸ்நேகா மாதர் சங்கம் உறுப்பினர்கள் பங்கேற்றனர். குற்றப்பிரிவு துணை கமிஷனர் அறிவுரை ”வெளியே செல்லும் போழுது நகைக்கடை விளம்பரம் போன்று அதிக நகைகளை அணிந்து செல்ல கூடாது. பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில் திருடர்களைப் பற்றி எச்சரிக்கும்போது, உங்கள் பையை பயத்தில் நீங்களே…
Read More பெண்களின் தற்காப்பிற்க்கு மிளகாய்பொடி அவசியம் என போலீசார் அறிவுரைஉத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ
Rail Engine got fire suddenly in Uttar Pradesh உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேசத்திலிருந்து புறப்பட்ட கோண்டா–பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில், ரிசியா என்ற இடத்தில் இரவு 10.30 மணிக்கு என்ஜினில் திடீரென தீ பிடித்தது. இப்படி திடீரென பற்றிய தீயால் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். சில பயணிகள் பீதியில் ரெயில் பெட்டிகளிலிருந்து வெளியே குதித்தனர். இத்தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த ரெயில்வே அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் என்ஜினில் பிடித்த தீயை 2 மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு அணைத்தனர். அதன்பின் மற்றொரு என்ஜினை பொருத்தி இரவு 2.55 மணியளவில் கோண்டா-பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென்றும் மேலும் இதைப் பற்றி உரிய விசாரணை மேற்க்கொல்லப்படும் என்றும்…
Read More உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீகங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு.
Central Government announced to close 48 factories for discharging pollutants to Ganges River கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு. மத்திய அரசு 48 தொழிற்சாலைகள் கங்கை நதியை நாசமாக்குவதால்மூட உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று அறிவித்திருக்கிறது. மத்திய நீர்வளமும் கங்கை தூய்மைபடுத்துதல் திட்டத்துக்கான இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் இதைப் பற்றி மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாவது, கங்கைக்கும் மற்றும் அதன் துணை நதிகளுக்கும் அருகிலுள்ள 764 தொழிற்சாலைகளிலிருந்து தினமும் 501 மில்லியன் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது. மேலும் இதை 1978ஆம் ஆண்டின் மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டம் மற்றும் 1986ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 48…
Read More கங்கை நதியை மாசு படுத்தும் 48 தொழிற்சாலைகளை மத்திய அரசு மூட உத்தரவு.ஏர் இந்தியா விமான இன்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு நியூஜெர்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்
Air India Flight returns to Newark Liberty’s Airport after engine catches fire நியூஜெர்சியிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் என்ஜினில் தீ பிடித்தால் உடனடியாக மீண்டும் நியுஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பியது. இது குறித்து நியூஜெர்சி விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் எரிக்கா டுமாஸ் கூறியதாவது: 313 பயணிகளுடன் அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் அதன் விமானத்தில் இடது பக்கத்தில் தீ பிழம்புகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சி விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியது. விமானம் இறங்கும் இடத்திற்கு ஆம்புலண்ஸ் வருமாறு விமானி வேண்டுகோள் விடுத்தார். எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளை இந்தியா…
Read More ஏர் இந்தியா விமான இன்ஜின் பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு நியூஜெர்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்திருட்டு விசிடியை கையும் களவுமாக பிடித்த நடிகர் விஷால்
காரைக்குடியில் ஒரு பகுதியில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ரிலீஸ் ஆகி ஒரு மாதமே ஆன உன் சமையல் அறையில், வடகறி போன்ற படங்கள் ஓட்டிக் கொண்டிருந்ததை எப்படியோ அறிந்த விஷால். அந்த கேபிள் டிவியின் அலுவலகத்தை போலீஸ் உதவியுடன் சென்றுள்ளார். முதல் வீடியோவில் வடகறி படம் ஓடிக் கொண்டிருப்பதை நீங்களே பார்க்கலாம். வடகறி ஓட்டுவதற்கு முன்பு தான் உன் சமையல் அறையில் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்தோடு பிடித்த விஷால் அலுவலகத்தில் இருந்த எல்லோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டாவது வீடியோ காவல் நிலையத்தில் விஷாலுடன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பேச்சுவாக்கில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றும் அந்த பத்திரிக்கையின் பெயரை உரக்க சொல்லியும் விடுகிறார். ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பட்ட சட்டவிரோதமான செயல்களில் உதவியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதையும் படியுங்கள் ஏர்…
Read More திருட்டு விசிடியை கையும் களவுமாக பிடித்த நடிகர் விஷால்கேரள மாநிளத்தில் பணிபுரிந்து வந்த 1300 தமிழ் ஆசிரியர்களை அதிரடியாக பணி நீக்கம்
kerala govt dismiss 1300 tamil teachers from schools கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர். Kerala Government dismisses around 1300 Tamil…
Read More கேரள மாநிளத்தில் பணிபுரிந்து வந்த 1300 தமிழ் ஆசிரியர்களை அதிரடியாக பணி நீக்கம்பஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்
Millionaire guru’s body kept in freezer as followers argue over whether he’s dead or asleep இறந்த சாமியாரின் உடலை, தூங்குவதாகக் கூறி கடந்த 6 மாதமாக ஐஸ்பெட்டியில் வைத்து பாதுகாக்கின்றனர் அவரது சீடர்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தன் என்ற அமைப்பின் மூலம் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் 70 வயதுடைய ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள். இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சீடர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் ஸ்ரீஅஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது சீடர்கள் அவர் இறக்கவில்லை அவர் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார் என கூறி, அவரது உடலை கடந்த 6…
Read More பஞ்சாப் மாநிலத்தில் இறந்துபோன சாமியாரின் உடலை 6 மாதமாக அவர் உறங்குகிறார் என்று கூறி வைத்திருக்கும் சீடர்கள்பிரான்ஸ்சில் 1982ஆம் ஆண்டு பனிமலையில் காணாமல் போன 23 வயது நபரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது
Missing climber’s body found in Alps after 32 years பிரான்ஸ் நாட்டில் மொண்ட் பிளான்க் பனிமலையின் மீது கடந்த 1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி, தனியாக ஏறத்துவங்கிய 23 வயது பாட்ரிஸ் ஹைவேர்ட் என்பவர் திடீரென வானிலை மாறியதால் காணாமல் போனார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, பாட்ரிஸ் இறந்ததை உறுதி செய்த மீட்பு படையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் நடைபெற்று 32 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது தலேப்ரே பனிமலைக்கு சென்ற இரு மலையேற்ற வீரர்கள் 2600மீட்டர் உயரத்தில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கொடுத்தனர். மலையேற்ற வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பார்த்தபோது, அது 23 வயதில் காணாமல் போன பாட்ரிஸ் ஹைவேர்ட்டின் சடலமென தெரியவந்தது. சுமார் 32 ஆண்டுகள் கழித்து மீட்க்கப்பட்ட…
Read More பிரான்ஸ்சில் 1982ஆம் ஆண்டு பனிமலையில் காணாமல் போன 23 வயது நபரின் சடலம் 32 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது