Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…
Read MoreCategory: செய்தி சிறகுகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.
40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…
Read Moreமங்கள்யான் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஓன்று 'டைம்' பத்திரிகை பாராட்டு
Mangalyaan Among Best Inventions of 2014: TIME Magazine 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, யாருமே முதல் முறையில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா தோல்வி அடைந்தது. ஆனால் செப்டம்பர் 24ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கியது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய்கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் பட்டியலில் 2 இந்தியர்களின் கண்டுபிடிப்புகளும் இடம்பிடித்துள்ளன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள…
Read Moreமத்தியப் பிரதேசத்தில் சென்ற ஓராண்டில் மட்டும் 10,577 குழந்தைகள் மாயம்
10,577 FIRs filed on missing children in one year, MP govt tells SC மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 3370 பெண் குழந்தைகள்…
Read Moreஇலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம்…
Read Moreஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.
ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள். மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில்…
Read Moreசென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி
Two killed as portion of old building collapses in Chennai சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை பாரிமுனை மலையபெருமாள் கோயில் தெருவில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பலசரக்குக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலசரக்குக் கடை ஊழியர் ராஜா (50), அருகிலுள்ள தேங்காய் கடையைச் சேர்ந்த சுபாஷ் (24), குமார் (50) ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து, கிடங்கின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல்…
Read Moreஆஸ்திரேலியா வின் குவீன்ஸ்லாந்து நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார்.
modi unveiled Mahatma Gandhi statue at Roma Park Street, Australia – Queensland ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குவீன்ஸ்லாந்து நகரில் இன்று நமது தேச தந்தை மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார். வெண்கலத்தால் செய்யப்பட்ட காந்தியின் இரண்டரை மீட்டர் உயரம் கொண்ட உருவச்சிலையை ரோமா ஸ்ட்ரீட் பகுதியில் திறந்து வைத்த மோடி பேசியதாவது:- குஜராத்தின் போர்பந்தர் நகரில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஒரு மனிதர் மட்டும் பிறக்கவில்லை. ஒரு சகாப்தமே பிறந்தது. தனது வாழ்நாளின்போது இருந்தது போலவே இன்றும் காந்தி நம்முடன் உயிர்ப்புடன் இருப்பதாகவே நான் அழுத்தமாக நம்புகிறேன். காந்தியின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் நாம் ஆராய்கையில் இன்று இந்த உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். ஒருவரின் சொல்லிலும், செயலிலும்…
Read Moreகாவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்
Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில்,…
Read Moreசோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"
“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…
Read More