தமிழ்நாட்டில் முதன் முறையாக காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை நடைமுறைப்படுத்த மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட ’வாட்டர் மேக்கர்’ இயந்திரம் மூலம் அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது. அதிலும் குழாய் இணைப்பு நீர் ஆதாரங்கள் எதுவும் இன்றி, ’திரவமாக்குதல், சேகரித்தல், வடிகட்டுதல் மற்றும் வழங்குதல்,’ பணிகளை அந்த இயந்திரமே செய்து முடிக்கும். அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில் ’வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியல் முதல் 32 டிகிரி செல்ஷியசிலும் ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில் திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும். மேலும்…
Read More விரைவில் காற்றில் இருந்து நீர் உற்பத்தி- மதுரை மானகராட்சி முடிவுCategory: செய்தி சிறகுகள்
ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.
14 year old boy dead in Rail accident மும்பையில் ஒடும் ரயிலில் சிறுவன் ஒருவன் சாகசம் காட்டுகிறேன் என்று நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், பெரும் நகரங்கள் சென்னை மும்பை போன்ற இடங்களில் இளைஞ்சர்கள் இதுபோல சாகசம் செய்கிறோம் என்று உயிரை விடுவது அதிகமாகி வருவதாகவும்,ரயிலில்…
Read More ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25). இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயிலுள்ள நோபல் பரிசு அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய பிராட்லி மேன்னிங்கிற்கு நோபல் பரிசு…
Read More அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசுஇலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு
Srilanka Religious issue இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்லாவிடின் அவர்களை ஓட…
Read More இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சுஅவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
Vijayakanth gets exemption from appearing in court சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் அவர் பல நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனபாலன், செல்வம் ஆகியோர், இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுதரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து அவதூறாக பேசியதாக, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஊர்களில்…
Read More அவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்குமதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி
Karunanithi blames Jayalaithaa for not constructing Maduravoyal Elevated high way சென்னை, ஆக. 13- : தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.…
Read More மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதிஉணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடி
Narendra Modi உணவு பாதுகாப்பு மசோதா சாதாரண மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏற்கனவே பிரதமருக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா சாமானிய மக்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாகிவிடும் என்றும்,ஊட்டச்சத்து குறைபாட்டினை எந்த வகையிலும் தீர்க்காது என்றும் கூறியுள்ளார். Narendra Modi இதையும் படியுங்கள் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்?.: கருணாநிதி அவதூறு வழக்கு! விஜயகாந்த்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு ஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்
Read More உணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடிஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்
indefinite strike in Andhra pradesh for Telangana statehood தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்ததால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து சேவையும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டைமாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. ஆந்திராவில் மின் வாரிய ஊழியர்கள் உள்பட 53 அரசு துறைகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலங்கானா அறிவிப்புக்கு எதிராக பதவி விலகவேண்டும் என்று ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்…
Read More ஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்தீ பிடித்து எறியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடித்து எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் ராகுல். இக்குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில் இதுவரை 4 முறை தானாக தீப்பற்றியதால் கிராம மக்கள் இந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஸ்பான்டின் க்யூமன் கம்பன்ஷன் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இக்குழந்தையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து நாராயணபாபு கூறுகையில், குழந்தை ராகுலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குழந்தையின் வியர்வை, ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து வருகிறோம். எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் இவற்றை…
Read More தீ பிடித்து எறியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்கடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்
India launched its first aircraft carrier INS Vikrant உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது . இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் . Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France,…
Read More கடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்